கிரீன் சிக்கன் வருவல் (Green chicken varuval recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
10 பேர்
  1. கிரீன் பேஸ்ட் தேவையானவை
  2. கைநிறைய கொத்துமல்லி
  3. கைநிறைய புதினா
  4. 10 பச்சை மிளகாய்
  5. 1 கப் தயிர்
  6. சிக்கன் வறுவலுக்கு தேவையானவை
  7. 1½ கிலோ சிக்கன்
  8. 3 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  9. 2நறுக்கின வெங்காயம்
  10. 4 ஏலக்காய்
  11. 2 இன்ச் இலவங்கப்பட்டை
  12. தேவையானஅளவுக்கு உப்பு
  13. 1 டீஸ்பூன் ஜீரா தூள்
  14. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  15. 50 கிராம்எண்ணெய்
  16. 1 டேபிள் ஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  17. 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  18. 4-5 கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    கொத்துமல்லி புதினா பச்சை மிளகாய் மற்றும் தயிர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இதை ஓரத்தில் வைத்து விடுங்கள்

  2. 2

    இன்னொரு கடாயில் 5 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் இலவங்கப்பட்டை, ஏலக்காய், தேவையான அளவுக்கு உப்பு மற்றும் வெங்காயத்தை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது மற்றும் 1½ கிலோ சிக்கன் சேர்த்த ஐந்து நிமிடம் மூடாமல் வதக்கவும். ஐந்து நிமிடத்துக்கு பிறகு மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்.

  3. 3

    இப்போது அதில் ஜீரா தூள் கரம் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அதில் கிரீன் பேஸ்ட் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 50 கிராம் பட்டர், கசூரி மேத்தி, கருவேப்பிலை மற்றும் மிளகுதூள் சேர்த்த ஐந்து நிமிடம் மறுபடியும் வதக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

Similar Recipes