எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. 1 சிறிய கேரட்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 5அல்லது6 கொத்துகள் வெங்காயத்தாள்
  5. 1வெண்டைக்காய்
  6. 8 பீன்ஸ்
  7. 1உருளைக்கிழங்கு
  8. 2 அல்லது 3 கத்தரிக்காய்
  9. 1/4கப் பட்டாணி
  10. 1முருங்கைக்காய்
  11. வேறு காய்கறிகள் வீட்டில் இருந்தால் முள்ளங்கி போன்றவை
  12. எலுமிச்சை அளவுபுளி
  13. அரைக்க தேவையானவை
  14. ஒரு ஸ்பூன் கடலை பருப்பு
  15. ஒரு டேபிள்ஸ்பூன் எள்ளு
  16. ஒரு ஸ்பூன் கசகசா
  17. இரண்டு வர மிளகாய்
  18. ஒரு டேபிள் ஸ்பூன் வரக்கொத்தமல்லி
  19. ஒரு ஸ்பூன் வரமிளகாய்த்தூள்
  20. 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  21. 1பட்டை
  22. 2அல்லது 3 கிராம்பு
  23. 1/4ஸ்பூன் மிளகு
  24. 1/2ஸ்பூன் சீரகம்
  25. 1/4மஞ்சள் தூள்
  26. ஒரு டம்ளர் பச்சை நொய்யரிசி
  27. 1/2டம்ளர் துவரம் பருப்பு
  28. 1/2 ஸ்பூன் வெல்லம்
  29. தேவையான அளவுஉப்பு
  30. 1 டேபிள் ஸ்பூன்தாளிக்கஆயில் மற்றும்
  31. 1 tbl sp நல்லெண்ணெய்
  32. 1/4 spoon பெருங்காய தூள் ஒரு
  33. 1 table spoon நெய் வாசத்திர்க்கு
  34. கறிவேப்பிலை கொத்தமல்லி தழை நறுக்கியது

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையான காய்கறிகள் அல்லது வீட்டில் இருக்கும் வகைகளை எடுத்து வைத்துக் கொள்ளவும்.அரைக்க தேவையான மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் பச்சைத் அரிசியை தண்ணீரில் கழுவி அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அரை டம்ளர் துவரம்பருப்பை குக்கரில் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பருப்பு வெந்தவுடன் தண்ணீருடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பச்சை நொய்யரிசி கொண்டு செய்தால் சுவை நன்றாக இருக்கும் குழையவும் வெந்துவிடும்.

  3. 3

    வறுத்து அரைக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொண்டு ஒரு ஸ்பூ எண்ணெய் வாணலியில் சேர்த்து சூடு செய்யவும். இதில் வறுப்பதற்கு தேவையான தேங்காய் சீரகம் மிளகு பட்டை கிராம்பு கசகசா வர மிளகாய் மல்லித்தூள் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு வறுக்கவும்.. முகவரி விட்டு மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    வாணலியில் போது நல்லெண்ணெய் சேர்த்து கடுகு தாளித்து அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்... நன்கு வதங்கியவுடன் பருப்பு,அரிசியை சேர்க்கவும்.

  5. 5

    காய் வதங்கிய பிறகு பருப்பில் உள்ள தண்ணீரை அளந்து பார்த்து ஊற்றிக் கொள்ளவும். பருப்புத் தண்ணீருடன் தண்ணீர் சேர்த்தால் 5 டம்ளர் அல்லது ஆறு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அப்பொழுதுதான் குழைய வேகும் கொழகொழப்பாக இருக்கும். ஆறினால் இறுகி போகாது.

  6. 6

    நன்கு கலந்து விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். நான்கிலிருந்து ஐந்து சவுண்ட் வரை விடலாம் அல்லது இரண்டு சவுண்ட் விட்டு 15 நிமிடம் வரை அடுப்பை சிம்மில் வைக்கவும். சாதம் குலைந்து வெந்துவிடும் பிறகு ஊற வைத்த புளியை கரைத்து சாதத்தில் சேர்த்து நன்கு கிளறவும். மிதமான தீயில்.கடைசியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும்.

  7. 7

    நெய் தங்களுக்குத் தேவையான அளவு சாதம் சூடாக இருக்கும்போதே கலந்து விட்டுவிடவும். சுவையான காய்கறிகள் சேர்த்த பருப்பு சேர்த்த சாம்பார் சாதம் தயார்.தொட்டுக்கொள்ள ஏதாவது ஒரு தயிர் பச்சடி அப்பளம் வடகம் இவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes