சட்டுன்னு ஒரு சாம்பார்(sambar recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
6 பேர்
  1. 1கப் பாசிப்பருப்பு
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1பெரிய சைஸ் தக்காளி
  4. 2ஸ்பூன் சாம்பார் தூள் அல்லது 3 ஸ்பூன்
  5. 1 ஸ்பூன் மல்லித் தூள்
  6. தேவையான அளவுஉப்பு
  7. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. சிறியஎலுமிச்சை அளவு புளி
  9. 1/4ஸ்பூன் சர்க்கரை
  10. 1டேபிள்ஸ்பூன் நெய்
  11. தாளிக் க
  12. 1 ஸ்பூன் எண்ணெய்
  13. 1ஸ்பூன் கடுகு
  14. 1/2ஸ்பூன் உளுத்தம் பருப்ப
  15. 1/4ஸ்பூன் பெருங்காய தூள்
  16. 2வரமிளகாய்
  17. கொஞ்சம்கறிவேப்பிலை கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பருப்பை கழுவி மஞ்சள்தூள் தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 சவுண்ட் வேக வைத்துக் கொள்ளவும். அல்லது தனி பாத்திரத்தில் கூட வேகவைத்து கொள்ளலாம். பத்து நிமிடங்களில் வெந்துவிடும்.பருப்பு வேகுவதர்க்குள் ஒரு பெரிய வெங்காயம் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். புளியை ஊறவைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு உளுத்தம் பருப்பு வரமிளகாய் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும். கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.பெரிய வெங்காயம் தக்காளியை சேர்த்து இதனுடன் நன்கு வதக்கிக் கொள்ளவும். பிறகு வேக வைத்த பாசிப்பருப்பை இதில் சேர்த்து சாம்பார் தூள், மல்லித் தூள் உப்பு சேர்த்து ஒரு கொதி வேகவிடவும். வெங்காயம் வெந்து விடும். பிறகு கரைத்து வைத்த ப புளியை புளிப்புத்தன்மை குறைவாக இருக்குமாறு சேர்த்துக் கொதிக்கவிடவும். கடைசியாக கால் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கொள்ளவும்.பரிமாறும்போது சாம்பாரில் நெய் சேர்த்து விடவும் சுவையான ஆரோக்கியமான சட்டுனு ரெடியாக கூடிய சாம்பார் ரெடி. இந்த சாம்பார் சப்பாத்தி பூரி மற்றும் தோசைக்கு சுவையாக இருக்கும். வெண் பொங்கலுக்கு மிகவும் சரியான ஜோடி இந்த சாம்பார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes