பானி பூரியின் பூரி (Poori recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

தஹீ பூரி, மசாலா பூரி, பானி பூரி, சூகா பூரி மற்றும் டிக்கி பூரி செய்வதற்கு பயன்படுத்தப்படும்

பானி பூரியின் பூரி (Poori recipe in tamil)

தஹீ பூரி, மசாலா பூரி, பானி பூரி, சூகா பூரி மற்றும் டிக்கி பூரி செய்வதற்கு பயன்படுத்தப்படும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1½ மணி நேரம்
  1. 1 கப் மைதா
  2. 1 கப் ரவை
  3. ½ டீஸ்பூன் உப்பு
  4. 1 சிட்டிகை இட்லி சோடா/ பேக்கிங் சோடா
  5. தேவையானஅளவுக்கு தண்ணி

சமையல் குறிப்புகள்

1½ மணி நேரம்
  1. 1

    அனைத்துப் பொருட்களையும் சேர்த்து மாவை கலக்கி கொள்ளவும். இப்போது அதில் தண்ணீர் சேர்த்து மாவை பிசைந்து கொள்ளவும். மாவு சாஃப்டாக (soft) இருக்க வேண்டும், ஏனென்றால் ராவா தண்ணீரை அப்சர்ப்(absorb) செய்யும். அரை மணி நேரம் மாவை ரெஸ்ட் பண்ண விடுங்கள்

  2. 2

    அரைமணி நேரத்துக்கு பிறகு மாவை உருட்டி போல் உருட்டி, குக்கீ கட்டர் அல்லது பாட்டில் கேப் வைத்து வட்ட வடிவத்தில் கட் பண்ணி கொள்ளுங்கள். நீங்க விரும்பினால் மீதி இருக்கிற மாவை சேர்த்து, அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மறுபடியும் அதை ரொட்டி போல் உருட்டி அதில் வட்ட வடிவத்தில் பூரி கட் பண்ணி கொள்ளலாம்.

  3. 3

    பொரிக்கும் போது எண்ணெய் சூடாக (medium high flame) இருக்க வேண்டும், அப்போதுதான் பூரி பாப்பிவரும். பூரியை ஒவ்வொன்றாக சேர்க்கவும். பூரியை எண்ணெயில் போட்ட பிறகு எண்ணெய் ஊற்றவும். ஒரு முறை அதிகபட்சம் 5 பூரி இருக்க வேண்டும்.

  4. 4

    கட் பண்ண பிறகு மீதி இருந்த மாவையும் நான் அப்படியே வருத்து கொண்டேன். இதை நான் மசாலா பூரி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்வேன்.

  5. 5

    சில பூரிகள் பொப்பி வராது, அதையும் மசாலா பூரி, டிக்கி பூரி, சூகா பூரி மற்றும் பாப்டி சாட் செய்வதற்கு பயன்படுத்திக்கலாம்.

  6. 6

    கட் பண்ண பிறகு மீதி உள்ள மாவை வறுக்காமல், மறுபடியும் அதை சப்பாத்தி போல் உருட்டி பூரி செய்தால் சுமார் 100 பூரிகள் வரும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

Similar Recipes