எலுமிச்சை கேக் (Lemon cake recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

2022 புத்தாண்டில் எனது முதல் பதிவு எலுமிச்சை கேக். வரும் ஆண்டு எல்லோருக்கும் இனிமையாக இருக்கவே எனது இந்த கேக்.
#Welcome

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

70நிமிடங்கள்
  1. 250 கிராம் வெண்ணெய்
  2. 2கப் மைதா மாவு
  3. 3முட்டைகள்
  4. 1டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  6. 2டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  7. 1கப் சர்க்கரை பவுடர்
  8. 1கப் பால்
  9. 1டேபிள் ஸ்பூன் பிஸ்தா, பாதாம் துருவல்
  10. 2டீஸ்பூன் எலுமிச்சை தோல் துருவல்
  11. பிராஸ்டிங் கிரீம் செய்ய :
  12. 1கப் வைப்பிங் கிரீம்
  13. 1/2 கப் ஐசிங் சுகர்
  14. 1டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  15. 2சொட்டு லெமன் கலர்
  16. அலங்கரிக்க ரெட் ரோஸ் இதழ்கள்

சமையல் குறிப்புகள்

70நிமிடங்கள்
  1. 1

    மைதா மாவு, பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா எடுத்து சலித்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பீட்டரில் வெண்ணெய், சர்க்கரை பவுடர் சேர்த்து பீட் செய்யவும்.

  3. 3

    பின்னர் முட்டையை ஒவ்வொரு முட்டையாக சேர்த்து பீட் செய்யவும்.

  4. 4

    பின்னர் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு நிமிடம் பீட் செய்து எடுக்கவும்.

  5. 5

    அதன் பின் தயாராக சலித்து வைத்துள்ள மைதா மாவு, எலுமிச்சை தோல் துருவல், பால் சேர்த்து பீட் செய்து எடுக்கவும். இப்போது கேக் கலவை தயார்.

  6. 6

    பின்னர் பட்டர் பேப்பர் போட்டு தயார் செய்த கேக் மோல்டில் சேர்க்கவும்.

  7. 7

    180 டிகிரியில் பன்னிரண்டு நிமிடங்கள் ப்ரீஹீட் செய்த
    மைக்ரோ வேவ் ஓவனில் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் எலுமிச்சை கேக் தயார்.

  8. 8

    பிராஸ்டிங் செய்ய பீட்டரில் வைப்பிங் கிரீம் சேர்க்கவும். அத்துடன் ஐசிங் சுகர் சேர்த்து பீட் செய்யவும்.

  9. 9

    அத்துடன் மஞ்சள் கலர், எலுமிச்சை சாறு சேர்த்து பீக்ஸ் வரும் வரை பீட் செய்து எடுக்கவும்.

  10. 10

    நன்கு பீக்ஸ் வந்ததும் எடுத்து பைப்பிங் பேக்கில் ஸ்டார் நாசில் போட்டு கிரீம் நிரப்பி தயார் செய்யவும்.

  11. 11

    பின்னர் கேக்கின் மேல் கிரீம் தடவி,ரோஸ் டிசைன் செய்து, நட்ஸ் தூவி அலங்கரிக்கவும்.

  12. 12

    இப்போது மிகவும் சுவையான எலுமிச்சை கேக் சுவைக்க தயார்.
    அத்துடன் எலுமிச்சை கிரீம் சேர்த்து ரோஸ் டிசைன் செய்து, ரெட் ரோஸ் இதழ்கள் வைத்து அலங்கரித்து கண்கவர் வண்ணத்துடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes