எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

இந்த வகை கேக் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். ஆனால் சுவை சூப்பர்.நான் சிறிய கேக் தான் செய்தேன். மிக அருமையாக இருக்கிறது என்று வீட்டில் பாராட்டு வேறு. நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

6-8 நபர்கள
  1. கேக் செய்ய:
  2. 1கப் மைதா
  3. 1 கப் பொடித்த சர்க்கரை
  4. 3/4 டீஸ்பூன் பேக்கிங் பௌடர்
  5. 3/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  6. 1/4கப் +2டேபிள் ஸ்பூன் சாக்கோ பௌடர்
  7. 1/2 கப் உருக்கிய வெண்ணெய்
  8. 1/2 கப் பால்ஆறினது
  9. 1டீஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி டிக்காஷன்1/2கப்
  10. 1பெரிய சைஸ் முட்டை
  11. 1சிட்டிகை உப்பு
  12. 1டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  13. எக்ஸ்பிரஸோ க்ரிம் செய்ய:
  14. 1கப் விப்பிங் க்ரீம்
  15. 1டீஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பௌடர்
  16. 1 டேபிள் ஸ்பூன் சாக்கோ பௌடர்
  17. கணாச்சி செய்ய:
  18. 50 கிராம் டார்க் சாக்லேட்
  19. 2டேபிள் ஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம்
  20. அலங்கரிக்க :
  21. 2சாக்கோ ஸ்டிக்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கேக் பௌலை பட்டர் பேப்பர் போட்டு தயாராக வைக்கவும்.

  2. 2

    மைதா, சாக்கோ பௌடர், பேக்கிங் பௌடர், சர்க்கரை, பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து சலித்து ஒருஅகன்ற பௌலில் போட்டு அதில் முட்டை, வெனிலா எசன்ஸ், வெண்ணெய், பால் சேர்த்து நன்கு கலந்து பீட்டர் வைத்து 2 நிமிடம் பீட் செய்யவும். பின்னர் சூடான காஃபி டிக்காஷனை சேர்த்து 1 நிமிடம் பீட் செய்து, பேக்கிங் பௌலில் ஊற்றி 2முறை தட்டி
    ஏற்கனவே 180 டிகிரி செல்சியஸ் ப்ரீஹுட் செய்த அவனில் வைத்து 30-40 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

  3. 3

    ஒரு டீப் பௌலில் விப்பிங் க்ரீமை ஊற்றி ஸ்டிஃப் பீக் வரும்வரை பீட் செய்யவும். இதில் காஃபி பௌடர், சாக்கோ பௌடர் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

  4. 4

    கேக் ஆறின பின் 2 லேயர் கட் செய்து வைக்கவும். முதல் லேயரில் காஃபி டிக்காஷனை ஒரு ஸ்பூனில் எடுத்து ஸ்ப்ரெட் செய்யவும்.

  5. 5

    அதன் மேல் தயாராக உள்ள எக்ஸ்பிரஸோ க்ரீமை தடவி பின்னர் அடுத்த லேயரை அதன்மேல் வைத்து மீண்டும் அதேபோல் செய்து க்ரீமை எல்லா பக்கங்களிலும் ஸ்ப்ரெட் செய்து நைசாக சமன் செய்து 1மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

  6. 6

    அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து அந்தபாத்திரத்தின் மேல் மற்றோரு பாத்திரத்தை வைத்து அதில் டார்க் சாக்லேட் போட்டு ஸ்பூன் வைத்து கலக்கிவிடவும். கரைந்ததும க்
    ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து கலந்து இறக்கி நன்கு கலக்கவும். சாக்லேட் கணாச்சி ரெடி.

  7. 7

    கேக்கை எடுத்து அதன் மேல் சாக்லேட் கணாச்சி ஊற்றி செட்டானதும், விப்டு க்ரீம், சாக்கோ ஸ்டிக் வைத்து அலங்கரிக்கவும். சூப்பரான, சுவையான எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (7)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
நீங்கள் செய்த சாக்லேட் கேக் எண்ணெய் மிகவும் கவர்ந்துந்துள்ளது... அழகாகவும் இருக்கிறது.... 👌👏👍😋

எழுதியவர்

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes