பாசிப்பருப்பு தோசை(moong dal dosa recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

#welcome வழக்கமாக செய்து கொடுக்கும் தோசையை காட்டிலும் சுவையாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.சுவையோடு ஆரோக்கியமும் கூடிய ரெசிபி என்றால் நாமும் மகிழ்ச்சியோடு செய்து கொடுக்கலாம்.

பாசிப்பருப்பு தோசை(moong dal dosa recipe in tamil)

#welcome வழக்கமாக செய்து கொடுக்கும் தோசையை காட்டிலும் சுவையாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.சுவையோடு ஆரோக்கியமும் கூடிய ரெசிபி என்றால் நாமும் மகிழ்ச்சியோடு செய்து கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 கப் பாசிப்பருப்பு
  2. 1 வர மிளகாய்
  3. உப்பு
  4. 1/2 ஸ்பூன் சீரகம்
  5. கருவேப்பிலை, கொத்தமல்லி இலை
  6. தண்ணீர்
  7. 2 பெரிய வெங்காயம்
  8. 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  9. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாசிப்பபருப்பை தண்ணீரில் நன்கு கழுவி பிறகு தண்ணீர் ஊற்றி, 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மிக்ஸியில் ஊற வைத்த பாசிப்பருப்பை சேர்த்து இதில் வர மிளகாய், உப்பு, சீரகம், கருவேப்பிலை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும். (புளிக்கத் தேவை இல்லை)

  2. 2

    அடுத்தது அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

  3. 3

    இந்த தோசைக்கு புதினா துவையல், தக்காளி சட்னி, தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.
    மொருமொருன்னு பாசிப்பருப்பு தோசை தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

கமெண்ட்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
I also made it almost like your recipe, in addition to paruppu I added 1/2 cup of rice to 2 cups of PP I love pesarattu

Similar Recipes