3சி கேக் (Cashew, Coffee,Chocolate Cake recipe in Tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

* சாக்லேட் சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்ட்களை உற்பத்தி செய்து, வயது முதிர்வை தடுக்கிறது.

*முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது.

#Ilovecooking #bake

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 1/2 கப் மைதா மாவு
  2. 1 கப் பொடித்த சக்கரை
  3. 2 டேபிள்ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபித்தூள்
  4. 1/2 கப் எண்ணெய்
  5. 1 டேபிள் ஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  6. 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 1/2 டேபிள் ஸ்பூன் சோடா
  8. 1/4 கப் கோக்கோ பவுடர்
  9. 1/2 கப் தயிர்

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் சிறிய ஸ்டாண்ட் ஒன்றை வைத்து மூடி போட்டு மிதமான தீயில் 10 நிமிடங்கள் சூடேற்றி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தயிர்,எண்ணெய்,மற்றும் சர்க்கரை சேர்த்து விஸ்க் கரண்டி வைத்து கலக்கிக் கொண்டு அதன் மேல் ஒரு சல்லடை வைத்து மைதா மாவு,கொக்கோ பவுடர், பேக்கிங் சோடா,மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    இந்த கலவையுடன் வெனிலா எசன்ஸ் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி தூளை தண்ணீரில் கலந்து சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும். ஒரு வட்டமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சுற்றிலும் தடவி கலந்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றி ஒரு தட்டு தட்டி மேலே முந்திரி துண்டுகளை தூவி அலங்கரிக்கவும்.இதனை சூடாக இருக்கும் கடாயின் உள்ளே வைத்து மூடி 45 முதல் 50 நிமிடங்கள் குறைவான தீயில் வேக வைத்து எடுத்தால் கேஷ்வ் காபி சாக்லெட் (3×C)கேக் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes