ராகி நூடுல்ஸ்(Hot and Spicy Healthy Ragi Noodles recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

ராகி நூடுல்ஸ்(Hot and Spicy Healthy Ragi Noodles recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1பாக்கெட் ராகி நூடுல்ஸ்
  2. 2பெரிய வெங்காயம்
  3. 1கேரட்
  4. 15பீன்ஸ்
  5. 3டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  6. 4+1டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ராகி நூடுல்சை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். 2 லிட்டர் அளவு தண்ணீரை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து அடுப்பில் கொதி வர விடவும்

  2. 2

    கொதி வந்ததும் நூடுல்சை பிரித்து அதனுள் சேர்த்து மூன்று நிமிடங்கள் வேகவிடவும். பிறகு இதனை தனியே வடிகட்டி சமையல் எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து விடவும்

  3. 3

    அடி கனமான கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி விடவும். பிறகு பொடியாக அரிந்த கேரட், பீன்ஸை சேர்த்து நன்கு கலந்து வதக்கி விடவும்

  4. 4

    காய்க்கு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு வடிகட்டிய நூடுல்ஸை சேர்த்து நன்கு உடையாமல் கிளறிவிடவும்

  5. 5

    இப்போது அதனுள் கொடுக்கப்பட்டிருக்கும் டேஸ்ட் மேக்கர் அதாவது மசாலாவை பிரித்து சேர்த்து நன்கு கிளறிவிடவும். இறுதியாக பிரஷ்ஷாக பொடித்த மிளகுத் தூளை சேர்க்கவும்

  6. 6

    மிதமான தீயிலேயே மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வைத்து நன்கு கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes