காரசார பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

#wt3

பொதுவாக அசைவம் பிரியர்களுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் இப்படி செய்த பள்ளிபாளையம் சிக்கன் மிக மிக ருசியாக இருக்கும். இதில் இஞ்சி-பூண்டு சேர்ப்பதில்லை எனவே சிக்கனில் குணம் மாறாமல் வாசனையுடன் சுவையுடன் அருமையாக இருக்கும்.

காரசார பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil)

#wt3

பொதுவாக அசைவம் பிரியர்களுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் இப்படி செய்த பள்ளிபாளையம் சிக்கன் மிக மிக ருசியாக இருக்கும். இதில் இஞ்சி-பூண்டு சேர்ப்பதில்லை எனவே சிக்கனில் குணம் மாறாமல் வாசனையுடன் சுவையுடன் அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஆறு பேர்
30 நிமிடங்கள்
  1. 1 கிலோ சிக்கன்
  2. 20 வரமிளகாய்
  3. 1/2 கிலோ சின்ன வெங்காயம்
  4. 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 4பத்தைபொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள்
  6. சிறிதளவுபொடியாக நறுக்கிய கொத்துமல்லி இலைகள்
  7. 300 மில்லி நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

ஆறு பேர்
  1. 1

    முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் மிதமான சூட்டில் மற்றும் கிள்ளிய வரமிளகாய் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி அதில் பொடியாக அறிந்த சின்ன வெங்காயத்தை சேர்க்கவும்

  3. 3

    வெங்காயம் சேர்த்தவுடன் அதிகநேரம் வதக்காமல் வெங்காயம் சிறிது வதங்கியவுடன் அதில் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    இப்பொழுது சிறிது மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி தண்ணீர் சேர்க்காமல் வேக விடவும் சிக்கனில் தண்ணீர் விடுவதால் தண்ணீர் சேர்க்க வேண்டியதில்லை 20 நிமிடங்கள் சிக்கனை மூடி போட்டு வேகவிடவும்

  5. 5

    20 நிமிடங்கள் கழித்து சிக்கனை ஒரு கிளறு கிளறி விட்டு அதில் பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள்மற்றும் கொத்துமல்லி இலைகளை சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் அருமையான சுவையான கார சார பள்ளிபாளையம் சிக்கன் தயார் 😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes