எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1 கட்டு பாலக்கீரை
  2. 2 கப் வேகவைத்த துவரம்பருப்பு
  3. 3 பெரிய வெங்காயம்
  4. 5 தக்காளி
  5. 4 வரமிளகாய்
  6. 2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு
  7. 1 ஸ்பூன் மல்லித்தூள்
  8. 2 ஸ்பூன் சாம்பார் பொடி
  9. 1/2 ஸ்பூன் மிளகுத் தூள்
  10. 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  11. 1 ஸ்பூன் கடுகு
  12. 1 ஸ்பூன் சீரகம்
  13. 1/4 ஸ்பூன் வெந்தயம்
  14. தேவையான அளவுஉப்பு
  15. தேவையான அளவுநல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    பாலக்கீரையை சுத்தம் செய்து அலசி பின் பொடியாக நறுக்கி கொள்ளவும் பின் வேகவைத்த துவரம்பருப்பு உடன் சேர்த்து வேகவிடவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து பொரிய விடவும் பின் நறுக்கிய வெங்காயம் பூண்டு வரமிளகாய் சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளி நன்கு மசிந்து வரும் வரை நன்றாக கிளறவும்

  3. 3

    பின் சாம்பார் பொடி மல்லித்தூள் மிளகுத்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின் வெந்த பருப்பு கீரை கலவை உடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes