பலாப்பழம் குக்கீஸ்(jackfruit cookies recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

பலாப்பழம் குக்கீஸ்(jackfruit cookies recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பரிமாறுவது
  1. 1 1/2 கப் மைதா மாவு
  2. 1/2 கப் சர்க்கரை பவுடர்
  3. 1/4 கப் நெய்
  4. 1/4 கப்நறுக்கிய பலாப்பழம்
  5. 10 பாதாம்
  6. 1 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. சிட்டிகை உப்பு
  8. 2 ஸ்பூன் ஜாம்
  9. 1 ஸ்பூன் தேன்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் பலாப்பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் நெய் ஊற்றி நறுக்கிய பலாப்பழத்தை சேர்த்து பத்து நிமிடம் நன்கு வதக்கி கொள்ளவும் பிற இதை ஆற வைக்கவும்.

  2. 2

    பிறகு ஒரு பாத்திரத்தில் நெய், பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பாதாம் பலாப்பழத்தை சேர்த்து நன்கு கலக்கவும்.

  3. 3

    அடுத்தது மைதா மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து தேவைப்பட்டால் காய்ச்சிய பால் சேர்த்து நன்கு கலக்கவும்.

  4. 4

    சிறு உருண்டைகளாக பிடிக்கவும். பேக்கிங் தட்டில் அடுக்கி வைக்கவும். 10 நிமிடம் முன் கூட்டியே oven'னை 180°C அளவிற்கு சூடாக்கவும். செய்த குக்கீஸ்'ஸை 45நிமிடம் 160°C அளவில் பேக் செய்யவும்.

  5. 5

    அடுத்தது 45 நிமிடம் கழித்து குக்கீஸ்'ஸை ஆறவிடவும். பிறகு ஒரு கிண்ணத்தில் ஃப்ரூட் ஜாம், தேன் சேர்த்து நன்கு கலக்கவும். குக்கீஸ் மேலே ஹார்ட் வடிவத்தில் செய்யவும்.

  6. 6

    பலாப்பழம் குக்கீஸ் இப்போ தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes