வெயிட்லாஸ் பொரியல்/கேரட் முட்டைகோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

கேரட் மற்றும் முட்டைகோஸ் குறைந்த கலோரி உணவுகள்.ப்ரோட்டின் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு நிரம்பியிருக்கச் செய்யும்.

எடை குறைக்க,சாதத்தின் அளவைக் குறைத்து,இந்த பொரியலின் அளவைக் கூட்டியும் உட்கொண்டால், கலோரியும் குறைவு.வயிறும் நிரம்பும்.செரிமானமும் நன்றாக நடக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25நிமிடங்கள்
3பேர்
  1. 1முட்டைக்கோஸ்
  2. 1கேரட்
  3. 2ஸ்பூன் பாசிப்பருப்பு
  4. 1பெரிய வெங்காயம்
  5. 1டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  6. தாளிக்க:
  7. 2ஸ்பூன் கடலை எண்ணெய்
  8. 1/2ஸ்பூன் கடுகு
  9. 2வரமிளகாய்
  10. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

25நிமிடங்கள்
  1. 1

    முட்டைகோஸ் மற்றும் கேரட்-ஐ சீவி வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வதங்கியதும்,சீவி வைத்துள்ள முட்டைகோஸ் மற்றும் கேரட் சேர்த்து கிளறவும்.பின் பாசிபருப்பு சேர்த்து கலந்து விடவும்.

  4. 4

    பின் 200ml அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு மூடி போட்டு வேக விடவும்.அடிக்கடி எடுத்து கிளறவும்.

  5. 5

    15-20நிமிடங்களில் வெந்து விடும்.3/4பதம் வேக வைத்தால் நன்றாக இருக்கும்.

  6. 6

    பின் உப்பு சேர்த்துக் கிளறி மேலும் ஒரு நிமிடத்திற்கு வேக விடவும்.கடைசியாக, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

  7. 7

    அவ்வளவுதான். எல்லாவிதமான குழம்பு வகைகளுக்கும் பொருந்தும் கேரட் முட்டைகோஸ் பொரியல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes