பூரி(உருளைக்கிழங்கு)மசாலா (poorikilangu Recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#WDY
பொட்டுக்கடலையும்,பெருஞ்சீரகமும் அரைத்து சேர்த்து செய்த இந்த மசாலா மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருக்கும்.

பூரி(உருளைக்கிழங்கு)மசாலா (poorikilangu Recipe in tamil)

#WDY
பொட்டுக்கடலையும்,பெருஞ்சீரகமும் அரைத்து சேர்த்து செய்த இந்த மசாலா மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
4பேர்
  1. 3-4உருளைக்கிழங்கு
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1மிளகாய்
  4. 3ஸ்பூன் பொட்டுக்கடலை
  5. 1/2ஸ்பூன் பெருஞ்சீரகம்
  6. தேவையானஅளவு உப்பு
  7. தாளிக்க:
  8. 3ஸ்பூன் கடலைஎண்ணெய்
  9. 1/2ஸ்பூன் கடுகு
  10. 1ஸ்பூன் கடலைப்பருப்பு
  11. 1/2ஸ்பூன் பெருஞ்சீரகம்
  12. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ள வேண்டும்.

    பொட்டுக் கடலையுடன்,1/2ஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.பின் 1டம்ளர் தண்ணீர் சேர்த்து மறுபடியும் அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,கடலைப்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருஞ்சீரகம் தாளித்து பின்,நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    முக்கால் பதம் வதங்கியதும் அரைத்த பொட்டுக்கடலை கரைசல்(அரைத்த கடலையில் தண்ணீர் சேர்க்காமல் மசாலாவில் சேர்த்தால் நன்றாக கலந்து கொள்ளாது)ஊற்றி அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.

  4. 4

    பின் வேக வைத்த கிழங்கை,மசித்து சேர்த்து கலந்து விட்டு,தேவையெனில் தண்ணீர் சேர்த்து இன்னும் வேக விடவும்.உப்பு சேர்க்கவும்.

  5. 5

    நன்றாக கொதித்து கிழங்கு மசாலா தேவையான பதம் வந்ததும்,உப்பு சரி பார்த்து, மல்லித்தழை தூவி இறக்கவும்.

  6. 6

    அவ்வளவுதான். சுவையான உருளைக்கிழங்கு மசாலா ரெடி.

    3 உருளைகிழங்குக்கு 3-4ஸ்பூன் அளவில் பொட்டு கடலையும்,1ஸ்பூன் பெருஞ்சீரகம் அல்லது நேரடியாக 1-1.5ஸ்பூன் பெருஞ்சீரகத்தூள் பொட்டுக்கடலையுடன் சேர்த்து அரைப்பது தான் அளவு.

    கடலை அதிகமானால்,கிழங்கு மசாலா,பேஸ்ட் போல் ஆகிவிடும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes