எண்ணெய் கத்திரிக்காய் புளிக்குழம்பு🍆(brinjal gravy recipe in tamil)

Jayasanthi Sivakumar
Jayasanthi Sivakumar @Jayasanthi

எண்ணெய் கத்திரிக்காய் புளிக்குழம்பு🍆(brinjal gravy recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
5 பேர்
  1. 150 கிராம் கத்திரிக்காய்
  2. 15 சின்ன வெங்காயம்
  3. 100 கிராம் நல்லெண்ணெய்
  4. 1 டீஸ்பூன் கடுகு
  5. அறை டீஸ்பூன் உளுந்து
  6. அறை டீஸ்பூன் வெந்தயம்
  7. அறைடீஸ்பூன் மிளகு சீரகம்
  8. 2 டேபிள் ஸ்பூன் மசால் பொடி
  9. நெல்லிக்காய் அளவுபுளி
  10. 1 கெத்து கருவேப்பிலை
  11. 1டீஸ்பூன் வெல்லம்
  12. தேவையானஅளவு உப்பு
  13. அறைக தேவையான பொருட்கள்
  14. 5 சின்ன வெங்காயம்
  15. அறைக்கப் தேங்காய்துருவல்
  16. 1 ஸ்பூன் சீரகம்
  17. 2 தக்காளி

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் புளித்தண்ணீயில் மசால் தூள் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

  2. 2

    கத்திரிக்காயை நன்றாக கழுவி துடைத்து நான்காக கீறி தண்ணீரில் போட்டு வைக்கவும்

  3. 3

    பின்னர் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கத்தரிக்காயை போட்டு நன்றாக ப்ரை செய்து எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    அதே எண்ணெயில் கடுகு வெடித்ததும் சீரகம் மிளகு வெந்தயம் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுதை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  5. 5

    வதங்கியதும் புளிக் கரைசலை ஊற்றி நன்றாக கலந்து விட்டு கொதிக்க விடவும் நன்றாக கொதி வந்தவுடன் ப்ரை செய்து வைத்த கத்திரிக்காயை அதில் போட்டு 5 நிமிடம் நன்றாக கொதித்த பிறகு ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்த்து நன்றாக கிளறி 5 நிமிடம் சிம்மில் வைத்து குழம்பை இறக்கி வைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jayasanthi Sivakumar
அன்று

Top Search in

Similar Recipes