முள்ளங்கி வ்ரைட் (fried) சாதம்(raddish fried recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#made4 #கலவை சாதம்
முள்ளங்கி எனக்கு மிகவும் விருப்பமான காய்கறி, நலம் தரும் சத்துக்கள் ஏராளம் -- விட்டமின் C, B, நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். குறைவான
கேலோரி. சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது, இரதத்தில் சக்கரை அளவை, BP கண்ட்ரோல் செய்யும். புற்று நோய் தடுக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1கப் பாஸ்மதி அரிசி
  2. ½ கப் தேங்காய் பால்
  3. 6அங்குலம் லெமன் கிராஸ்
  4. 2மேஜை கரண்டி நல்லெண்ணய்
  5. ½தேக்கரண்டி கடுகு
  6. ½தேக்கரண்டி சோம்பு
  7. 1மேஜை கரண்டி உளுந்து
  8. 1மேஜை கரண்டி கடலை பருப்பு
  9. 1 கப் வேர்க்கடலை
  10. 1தேக்கரண்டி இஞ்சி, துருவியது
  11. 1தேக்கரண்டி பூண்டு துருவியது
  12. 10கறிவேப்பிலை
  13. 1/4தேக்கரண்டி பெருங்காயம்
  14. 1கப் வெங்காயம், பொடியாக நறுக்கியது
  15. 1/4தேக்கரண்டி மஞ்சள் பொடி
  16. 3கப் முள்ளங்கி துருவியது
  17. 1மேஜை கரண்டி மசாலா பொடி
  18. தேவையானஉப்பு
  19. அலங்கரிக்க:
  20. ½ கப் camalized வெங்காயம்
  21. 1 கப் கிரீன் ஆனியன் தழை பொடியாக நறுக்கியது
  22. 1தேக்கரண்டி கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது
  23. ½ கப் டிரை ரோஸ்டட் வேர்க்கடலை
  24. கலவை சாதம்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க

  2. 2

    தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க

  3. 3

    ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரில் அரிசி 20 நிமிடங்கள் ஊற வைக்க. களைந்து வடிக்க. தேங்காய் பால், 2 கப் கொதிக்கும் தண்ணீர், லெமன் கிராஸ் கூட சேர்த்து பிரஷர் குக்கறில் வேகவைக்க சாதம் உதிரி உதிரியாக இருக்கவேண்டும்

    அரிசி வெந்துக்கொண்டிருக்கும் போது மீதி வேலைகளை கவனிக்க.
    கார்மலைஸ்ட் (Carmalized) மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பேனில் 1 மெஜைக்கரண்டி எண்ணையில்மெல்லியதாக சீவிய வெங்காயம் சேர்க்க. 1 தேக்கரண்டி சக்கரை சேர்த்து வறுக்க. க்ரிஸ்ப் ஆக பிரவுன் ஆகட்டும்.

  4. 4

    மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சூடான பின் கடுகு சேர்க்க. பொறிந்த பின் சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, போட்டு தாளிக்க. வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க; வெங்காயம் பிரவுன் ஆக வேண்டாம். முள்ளங்கி துருவல், சேர்த்து வதக்க, 5 நிமிடம். மசாலா பொடி சேர்த்து கிளற. உப்பு சேர்த்து கிளறி சாதத்துடன் சேர்க்க. 1 மேஜை கரண்டி நெய் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க. 30 நிமிடம் அடுப்பின் மேலேயே வைக்க. எல்லா சுவைகளும், வசனைகளும் ஒன்று சேரட்டும். ருசிக்க

  5. 5

    பரீம்மாறும் போலிர்க்கு மாற்றுக. camalized வெங்காயம் கிரீன் ஆனியன் தழை, கொத்தமல்லி, ரோஸ்டட் வேர்க்கடலை தூவி அலங்கரிக்க. அப்பளம், வறுவல், பச்சடி கூட பரிமாறுக நான் வெள்ளரிக்காய் தயிர் பசச்சடி, பொறித்த மரவள்ளி கிழங்கு அப்பளம், உருளை வறுவல் கூட பரிமாறினேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes