தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
இரண்டு பேர்
  1. ஒரு கப் பச்சரிசி
  2. ஒரு கப் இட்லி அரிசி
  3. அரை கப் கருப்பு உளுந்து அல்லது வெள்ளை உளுந்து
  4. ஒரு டீஸ்பூன் வெந்தயம்
  5. ஒரு ஸ்பூன் உப்பு
  6. தாளிக்க தேவையான பொருட்கள்
  7. ஒரு டீஸ்பூன் மிளகு
  8. ஒரு ஸ்பூன் சீரகம்
  9. ஒரு டீஸ்பூன் கடுகு
  10. ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு
  11. ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது நெய்
  12. ஒரு டீஸ்பூன் சுக்குப்பொடி

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    அரிசி,உளுந்து, வெந்தயம் இவற்றை தனித்தனியாக 5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். நன்கு கொரகொரப்பாக அரைத்து உப்பு சேர்த்து கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி கடுகு தாளித்து கடலைப்பருப்பு ஒன்றிரண்டாக பொடித்த மிளகு சீரகம் வதக்கி புளித்த மாவில் கொட்டவும். கடைசியாக சுக்குப் பொடியும் சேர்த்து கலக்கி வைக்கவும்.

  4. 4

    இப்பொழுது முடிந்தால் வாழை இலையில் தொன்னை மாதிரி செய்து அதில் வேக வைக்கவும். அல்லது சிறிய டம்பளர் அல்லது இட்லி தட்டில் ஊற்றி இட்லி பானையில் வைத்து 15 நிமிடம் வேக வைக்கவும்.

  5. 5

    இதற்கு தொட்டுக்கொள்ள காரச்சட்னி அல்லது மிளகாய் பொடி நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meenakshi Ramesh
அன்று

Similar Recipes