கீரை வெங்காயம் சேர்ந்த சுவையான அடை(keerai adai recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#queen1
புரதம், உலோகசத்துகள், நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள், கீரை, பார்லி மாவு, வ்ளெக்ஸ் மாவு கலந்த சுவை சத்து சேர்ந்த அடை .
பாதி அடை மாவில் கேல் மற்ற பாதியில் ஸ்பினாச்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
10 பரிமாறுவது
  1. 3கப் பச்சரிசி
  2. ¼ கப் முழு உளுந்து
  3. ¼ கப் முழு பயறு
  4. ¼ கப் கடலை பருப்பு
  5. 1 தேக்கரண்டி வெந்தயம்
  6. 1 அங்குலம் இஞ்சி, தோலுரித்தது
  7. 10 உலர்ந்த மிளகாய்
  8. 2 பச்சை மிளகாய்
  9. ¼ கப் பார்லி மாவு
  10. ¼ கப் வ்ளெக்ஸ் மாவு
  11. 1/2கப் வெங்காயம் பொடியாக நறுக்கியது
  12. ¼ கப் கறிவேப்பிலை
  13. 1/4கப் கேல் பொடியாக நறுக்கியது
  14. 1/4கப் பேபி ஸ்பினாச் பொடியாக நறுக்கியது
  15. ¼ தேக்கரண்டி பெருங்காயம்
  16. 2 மேஜை கரண்டி சீரகம்
  17. தேவையானஉப்பு
  18. தேவையானஎண்ணை
  19. அடை

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்

  2. 2

    நீரில் அரிசி, பருப்புகள், வெந்தயம் 4-6 மணி நேரமாவது ஊறவைக்கவும். வடித்து கூட இஞ்சி, மிளகாய்,, நீர் சேர்த்து கிரைண்டரில் போட்டு கொற கொறவென்று அறைக்கவும். பார்லி மாவு, வ்ளெக்ஸ் மாவு போதிய நீர் சேர்த்து விஸ்க செய்க. மாவு சிறிது கெட்டியாக இருக்கவேண்டும். தேவையான உப்பு சேர்த்து கிளறவும். 1 மணி நேரம் ரெஸ்ட் செய்க. அடை செய்யும் முன் வெங்காயம்,, கறிவேப்பிலை, சீரகம். பெருங்காயம், கேல் அல்லது ஸ்பினாச் சேர்க்க
    சேர்த்து நன்றாக கிளறி கலக்கவும், ஸ்ரீதற்க்கு கேல் விருப்பமில்லை

  3. 3

    தோசைக் கல்லை மிதமான நெருப்பின் மேல் வைக்க, நான் cast iron ஸ்கிலேட்தான் உபயோகிப்பேன். சூடான பின், கல்லின் மேல் எண்ணை தடவி எப்பொழுதும் அடை செய்வது போல 1 கப் மாவில் ஒரு அடை செய்க. அடை மெல்லியதாக இருக்கவேண்டியதில்லை மேலே 2 தேக்கரண்டி எண்ணை பரவலாக ஊற்றுக. மூடி இரண்டு பக்கமும் வேகவைக்க. 3-4 நிமிடங்களில் சத்தான சுவையான ஒரு அடை தயார்.

  4. 4

    எப்பொழுதும் சுவைத்துப்பாருங்கள். சூடாகவும் சாப்பிடலாம், ஆறினவுடனும் சாப்பிடலாம். சாம்பாரோடோ அல்லது விருப்பமான சட்னியோடோ, ஊறுகாயோடோ, மிளகாய் பொடியோடோ, கூட்டோடோ அல்லது துவையலடோ பரிமாறுக. நான் தக்காளி, வெங்காயம், இஞ்சி, வேர்க்கடலை சேர்ந்த கார சட்னி, என் தோட்டத்து எலுமீச்சையில் நான் செய்த ஊறுகாய் கூட பரிமாறினேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (3)

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes