1.5கிலோ சீரக சம்பா அரிசியில் வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)

1.5கிலோ சீரக சம்பா அரிசியில் வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்,தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரிசியை 30 நிமிடங்கள் ஊறவைத்து வடிகட்டவும்.
டபிள் பீன்ஸ் ஐ 5 மணி நேரம் ஊற வைத்து எடுக்கவும்.
- 2
அடி கனமான பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து தாளிக்க கொடுக்கப்பட்ட பொருட்களை சேர்த்து தாளித்து,நறுக்கிய வெங்காயம்,மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து மசிய வதக்கவும்.
- 3
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து,பச்சை வாசம் போனதும், மிளகாய்த்தூள்,மல்லித்தூள், பிரியாணி மசாலா தூள் சேர்த்து 2 நிமிடங்களுக்கு கிளறவும்.
- 4
பின் தயிர் சேர்த்து கிளறி,பின்னர் மல்லி புதினா அரைத்த விழுது சேர்த்துக் கிளறவும்.
- 5
பிறகு வெட்டி வைத்த காய்கறிகள் சேர்க்கவும்.
காய்கறிகள் நம் விருப்பத்திற்கேற்ப கூட்டி குறைத்து சேர்க்கலாம்.
- 6
1கப் பாசுமதி/சீரக சம்பா/சாப்பாடு புழுங்கல் அரிசிக்கு 2 கப் அளவு தண்ணீர் சேர்க்க(வெஜிட்டபிள் தம் பிரியாணிக்கு) வேண்டும்.
எனவே,அரிசியின் அளவிற்கு
இன்னோரு மடங்கு தண்ணீர் சேர்த்து மீடியும் தீயில் 15 நிமிடங்கள் நன்றாக காய்கறிகளை வேக வைக்கவும்.தண்ணீர் கொதித்ததும் உப்பு,காரம் சரிபார்த்து சேர்க்கவும். - 7
காய்கறிகள் முக்கால் பதம் வெந்ததும்,ஊற வைத்து வடிகட்டிய அரிசி சேர்க்கவும். அரிசி சேர்த்து கொதித்ததும் உப்பு சரிபார்த்து ஒரு பெரிய எலுமிச்சம் பழச்சாறு மற்றும் சிறிதளவு புதினா இலைகள் சேர்த்து கலந்து விடவும்.
- 8
சரியாக 8-10 நிமிடத்தில் அரிசி வெந்து விடும். அரிசி உடையாமல் கிளறவும். அரிசியும் தண்ணீரும் சமமாக இருக்கும் பொழுது,அதாவது நடுவில் தோண்டிப் பார்த்தால் கிரேவி தண்ணீர் இருக்கக்கூடாது.
- 9
இந்த சமயத்தில், தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து அதன் மேல் கனமான பொருள் வைத்து 20 நிமிடங்கள் சிறு தீயில் தம் போடவும்.
- 10
பின் 20 நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்தால்,பிரியாணி நன்றாக உதிரியாக இருக்கும்.
- 11
அவ்வளவுதான். சுவையான சீரக சம்பா வெஜிடபிள் பிரியாணி ரெடி.
- 12
200கி அரிசிக்கு
1ஸ்பூன் மல்லி தூள்
1ஸ்பூன் மிளகாய் தூள்
1/2ஸ்பூன் பிரியாணி மசாலா தூள் என்பது தான் அளவு.
Similar Recipes
-
-
-
-
-
-
-
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
-
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
-
-
வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
Book ( 1 வாரம்- 1 St ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
-
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
#chefdeena#பிரியாணி Kavitha Chandran -
பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)
#CF1பிரியாணி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது பாய் சகோதரர்கள் வீட்டில் செய்து தருவதுதான்....இதனை நமது இல்லங்களில் செய்து பார்க்க இந்த பதிவு... karunamiracle meracil -
-
-
More Recipes
கமெண்ட் (4)