வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு(valaipoo kola urundai kulambu recipe in tamil)

வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு(valaipoo kola urundai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோலா உருண்டை செய்ய: சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சோம்பு சீரகம் கறிவேப்பிலை தேங்காய் துண்டுகள் வேர்கடலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும்
- 2
பின் வாழைப்பூவை சுத்தம் செய்து நரம்பு நீக்கி உப்பு லெமன் சாறு மோர் கலந்த தண்ணீரில் போடவும் பின் அதை நறுக்கி மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும்
- 3
பின் பட்டாணியை கரகரப்பாக அரைத்து எடுக்கவும் பின் உப்பு சேர்த்து பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
- 4
பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 5
உருண்டைகளை போடும் போது முதலில் அடுப்பை மெல்லிய தீயில் வைத்து பின் பாதி வெந்ததும் அடுப்பு தீயை அதிகரித்து வேகவிடவும்
நம்முடைய கோலா உருண்டை ரெடி
- 6
கிரேவி செய்ய: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சுத்தம் செய்த வெங்காயம் பட்டை சோம்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து வதக்கவும்
- 7
பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி தேங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கவும்
- 8
தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் போடவும்
- 9
பின் மல்லித்தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் கரம் மசாலா தூள் குழம்பு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும் பின் வாணலியில் தாளிக்க எண்ணெய் விட்டு சூடானதும் பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் மராத்தி மொக்கு அன்னாச்சி பூ ஜாதிபத்ரி சேர்த்து வதக்கவும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 10
வெங்காயம் பொன்னிறமானதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும் பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 11
நன்றாக பச்சை வாசனை போக கொதித்ததும் ரெடியாக உள்ள கிரேவியில் ஒவ்வொன்றாக மெதுவாக போட்டு ஐந்து நிமிடம் வரை மெல்லிய தீயில் வைத்து கொதிக்க விடவும் பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 12
சுவையான ஆரோக்கியமான வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வாழைப்பூ கோலா உருண்டை(vaalaipoo kola urundai recipe in tamil)
முதல் முறை செய்த பொழுது,பதம் சரியாக இல்லாமல்,எண்ணெயில் போட்டதும்,பிரிந்து விட்டது.இரண்டாம் முறை, தவறை திருத்தி,சுவையாக செய்து அசத்தி விட்டேன்.வீட்டில் அனைவருக்கும் பிடித்து விட்டது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
செட்டி நாடு ஸ்பெஷல், *வாழைப்பூ கோலா, உருண்டை*(valaipoo kola urundai recipe in tamil)
இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, இரத்தத்தை சுத்தப் படுத்துகின்றது.மாதவிடாய், வயிற்றுவலி போன்ற பிரச்னைகளை குறைக்கின்றது.இரத்த அழுத்தம், இரத்த சோகை வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
-
-
வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai recipe in tamil)
#my1strecipe#Arusuvai3 Subhashree Ramkumar -
-
வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்புச் சுவை மிக்கது. துவர்ப்பு சுவை இரத்தத்தை பெருக்கக் கூடியது. அதனால், வாழைப்பூ அடிக்கடி செய்து சாப்பிடுதல் உடலுக்கு மிகவும் நல்லது . அதுவும் இப்படி வித்தியாசமாக செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.#3 Mispa Rani -
-
-
-
-
வாழைப்பூ கோலா உருண்டை (Vaazhaipoo kola urundai recipe in tamil)
கடலைப்பருப்பு ஒரு உழக்கு ஊறப்போட்டு ப.மிளகாய் 4 ,இஞ்சி, உப்பு சிறிதளவு போட்டு அரைத்து அதில் பொடியாக வெட்டிய வாழைப்பூ போட்டு உருண்டை களாக சுடவும். ஒSubbulakshmi -
-
-
-
-
முடக்கத்தான் கீரை உருண்டை குழம்பு (Mudakkathaan keerai urundai kulambu recipe in tamil)
முடக்கத்தான் கீரை மூட்டு வலி க்கு ஒரு வர பிரசாதம் இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த குழம்பு. எண்ணையில் வதக்கிய வெங்காயம், தக்காளி, வேக வைத்த துவரம்பருப்பு. தேங்காய் பால் சேர்த்து குழம்பு செய்தேன். குழம்பு , உருண்டை இரண்டையும் ஒரே நேரத்தில் தனி தனியாக செய்து பின் இரண்டையும் ஒன்று சேர்த்து கொதிக்க வைய்த்தேன், உருண்டை செய்ய, கொதி நீரில் முடக்கத்தான் இலைகள் சேர்த்து, வடித்து (blanch), ஐஸ் தண்ணீரில் குளிரவைத்தேன். பின் சின்ன சின்னதாக நறுக்கி, மசாலா பொடி, உப்பு, அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டை செய்தேன். உருண்டைகளை நீராவியில் வேகவைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்தேன். ருசியான ஆரோக்கியமான முடக்கத்தான் உருண்டை குழம்பு தயார் #leaf Lakshmi Sridharan Ph D -
அத்திக்காய் உருண்டை குழம்பு(atthikkai urundai kulambu recipe in tamil)
அத்திக்காய் உறுப்புக்கள் எல்லாவற்றையும் பல படுத்தும் வேறென்ன வேண்டும் சிறுவ சிறுமியர்களுக்கு, தேடீ பார்த்து அத்திக்காய் வாங்கி அத்திக்காய் உருண்டை குழம்பு செய்து லஞ்ச் பாக்ஸில் சாதத்துடன் கலந்து சிப்ஸ் கூட வைக்க. நான் என் மருமாளுக்கு சக்கரை வள்ளி கிழங்கு சிப்ஸ். பட்டாணி சிப்ஸ் கூட லஞ்ச் பாக்ஸில் சாதத்துடன் வைத்தேன். #LB Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்