இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20-30நிமிடம்
4 நபர்கள்
  1. 1பெரிய வெங்காயம் (துண்டுகளாக நறுக்கியது)
  2. 6 பூண்டு பற்கள்
  3. 2தக்காளி (துண்டுகளாக நறுக்கியது)
  4. 3-4 பச்சை மிளகாய்
  5. 3கத்தரிக்காய் (துண்டுகளாக நறுக்கியது) விருப்பமெனில்
  6. 5சின்ன வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது
  7. 2 காய்ந்த மிளகாய்
  8. சிறிதுகறிவேப்பிலை
  9. 3 டேபிள்ஸ்பூன் கடலைமாவு
  10. 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  11. 1/4 டீஸ்பூன் கடுகு
  12. 1/4 டீஸ்பூன் சீரகம்
  13. 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  14. சிட்டிகை பெருங்காயத்தூள்
  15. சிறிதளவுமஞ்சள் தூள்
  16. தேவையானஅளவு உப்பு
  17. தேவையானஅளவு தண்ணீர்
  18. கையளவு நறுக்கிய கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

20-30நிமிடம்
  1. 1

    குக்கரில் நறுக்கிய வெங்காயம்,பூண்டு, தக்காளி பச்சை மிளகாய், கத்தரிக்காய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும்.

  2. 2

    பின் இதை மத்து வைத்து கடைந்து கொள்ளவும் அல்லது மிக்சியில் லேசாக ஒரு சுற்று சுற்றி எடுத்து கொள்ளவும்.

  3. 3

    அடுப்பை பற்ற வைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் வெந்தயம் சேர்க்கவும். இதோடு பெருங்காயத்தூள் சேர்த்து கொள்ளவும். பின்னர் சிறிய வெங்காயம் காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின் கடைந்து வைத்துள்ள கலவையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

  4. 4

    5-10 நிமிடம் கழித்து சிறிய கிண்ணத்தில் கடலைமாவு மற்றும் 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து இதை கொதித்து கொண்டிருக்கும் கலவையில் ஊற்றவும். மிதமான தீயில் 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். பருப்பில்லாத சுவையான இட்லி சாம்பார் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
அன்று

Similar Recipes