ரோஜா சர்பத்-- மொஜிட்டோ (rose sarbath recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#sarbath roohafza mojito,
என் தோட்டத்தில் 400 மேல் ரோஜா செடிகள், பல நீற பூக்கள், பல வித வாசனைகள். பூச்சி மருந்து பயன்படத்துவதில்லை. ஃபிரெஷ் சிகப்பு, பூக்களை பறித்து சர்பத் செய்தேன். நான் சக்கரை அதிகம் சேர்ப்பதில்லை, refined white சக்கரை சேர்ப்பதில்லை,.உங்கள் ரூசிக்கேற்றவாறு சக்கரை சேர்க்க. இனிப்பு வேண்டுமானால் பருகும் போது தேன் சேர்க்கலாம். உங்கள் விருப்பம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 4கப் ரோஜா இதழ்கள்
  2. 1தேக்கரண்டி சிட்றிக் ஆசிட் (citric acid) அல்லது எலுமிச்சை ஜூஸ்
  3. ½கப் பிரவுன் சக்கரை
  4. 4 கப் நீர்
  5. 2 தேக்கரண்டி சிட்றிக் ஆசிட் அல்லது எலுமிச்சை ஜூஸ்
  6. 1 தேக்கரண்டி குங்குமப்பூ
  7. ½ கப் தேன்
  8. மொஜிட்டோ roohafza mojito:
  9. 2 மேஜைகரண்டி சப்ஜா
  10. 2 மேஜைகரண்டி சிரப்(rooh afza syrup)
  11. 3புதினா இலைகள் (pepper mint)
  12. ½ எலுமிச்சை
  13. ஐஸ் கோல்ட் நீர்
  14. ஐஸ் கட்டி ஐஸ் cubes
  15. ரோஜா பால்:
  16. 2 மேஜைகரண்டி சிரப்
  17. 2 மேஜைகரண்டி சப்ஜா
  18. ஐஸ் கோல்ட் பால்
  19. ஐஸ் கட்டி ஐஸ் cubes
  20. ஜெல்லி:
  21. 1 கப் சிரப்
  22. ½ தேக்கரண்டி அகார் அகார்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகிலேயே வைக்க

  2. 2

    செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகிலேயே வைக்க

  3. 3

    அழகிய ஃபிரெஷ் ரோஜா இதழ்களை உபயோகிக்க. இதழ்களின் அடியில் வெண்மையாக இருக்கும் பாகத்தை நீக்கிவிடுக. நன்றாக கழுவுக. பின் பேப்பர் டவல் மீது பரப்பி நீரை நீக்குக. சாலட் டிரைனர் இருந்தால் அதில் இதழ்களை போட்டு 2 சுற்று சுற்றினால் ஒட்டிக்கொண்டிருக்கும் நீரெல்லாம் வடிந்துவிடும். பின் இதழ்களை ஒரு போலில் (அல்லது ziplock bag) போட்டு, சிட்றிக் ஆசிட், சக்கரை சேர்த்து கையால் அழுத்தி ஒன்று சேர்க்க. ஜூஸ் எல்லாம் ஒன்று சேர்த்து அளவு குறையும். பின் குலுக்கி மூடி ரேபிரிஜெரேட் 2 நாட்கள் செய்க.

  4. 4

    மீடியம் நெருப்பில் ஒரு கடாயில் தண்ணிர் கொதிக்க வைக்க. இதில் ஸ்டார்ட்டர் சேர்க்க. நெருப்பை குறைக்க. இதழ்கள் வேகட்டும், சாஃப்ட் ஆகட்டும். தண்ணிர் நிறம் மாறும். 10-15 நிமிடங்கள், வடித்து நீரை தனியாக எடுத்து வைக்க.
    மிதமான நெருப்பின் மேல் கடாயில் வடித்த நீரை சக்கரை சேர்த்து கிளற, கிளறி கொண்டே இருக்க. சிரப் கொதிக்கும். ஒறு கப் ஜெல்லி செய்ய எடுத்து கொண்டேன். மீதி ஷர்பத் சிரப் செய்ய கொதித்து கெட்டியாக்கும், 10-15 நிமிடம், 70% கெட்டியான பின். சிட்றிக் ஆசிட் சேர்க்க.

  5. 5

    விரல்களில் பிசுக் பிசுக் என்று சிரப் ஓட்டினால் ரெடி. அடுப்பை அணைக்க. ருசிக்க இனிப்பு அதிகம் வேண்டுமானால் 1/2 கப் தேன் சேர்த்து கிளற. ஆறின பின் sterile jaril சீறப் சேமித்து வைக்கலாம். ரேபிரிஜேரேட் ரூஹாவ்ஜா மோஜிட்டோ
    (roohafza mojito)
    ஒரு க்ளாசில் சப்ஜா, சிரப்(rooh afza syrup), 3புதினா இலைகள்,, ½கப் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து நன்றாக மிக்ஸ். பின் ஐஸ் கோல்ட் நீர் சேர்த்து நன்றாக மிக்ஸ். ஐஸ் கட்டி cubes மேலே போடுக மொஜீடோ ரெடி

  6. 6

    ரோஜா பால் சர்பத் : ஒரு க்ளாசில் சப்ஜா, சிரப்(rooh afza syrup), சேர்த்து நன்றாக மிக்ஸ். பின் ஐஸ் கோல்ட் பால் சேர்த்து நன்றாக மிக்ஸ். ஜெல்லி சேர்க்க ஐஸ் கட்டி cubes மேலே போடுக, ரெடி. பருந்துக

    ஜெல்லி: ஒறு கிண்ணத்தில் அகாருடன் 2 மேஜைகரண்டி சூடு நீர் சேர்க்க. 5 நிமிடம் ரெஸ்ட் செய்க. அகார் bloom ஆகும், இதை ஜெல்லி செய்ய எடுத்து கொண்ட சிரப் கூட சேர்த்து மிக்ஸ் செய்து மோல்டீல் ஊற்றி ஆறவைக்க 15 நிமிடம். பின் ரேபிரிஜேரேட் செய்க, 2 மணி நேரத்தில் செட் ஆகும். சின்ன துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes