உளுந்து அப்பளம்(ulunthu applam recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

உளுந்து அப்பளம்(ulunthu applam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
10பேர்
  1. 1கப் முழு உளுந்து
  2. 1/2ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  3. 1ஸ்பூன் நல்லெண்ணெய்
  4. 1/2ஸ்பூன் உப்பு
  5. தேவையானஅளவு மைதா/கோதுமை மாவு

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    1கப் உளுந்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக மைய அரைக்கவும்.பின் சலித்து எடுக்கவும்.

    உளுந்து ப்ரெஷ் ஆக இல்லையெனில், 30நிமிடங்கள் நல்ல வெயில் வைத்து விட்டு அரைத்தால் அரைபடும்.

  3. 3

    சலித்த உளுந்து பொடியில்,உப்பு,பேக்கிங் பவுடர் மற்றும் நல்லெண்ணெய் கலந்து விட்டு,பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைய வேண்டும்.

  4. 4

    மாவு ரொம்ப 'திக்' காக தான் இருக்கும்.வெகு நேரம் அழுத்தி பிசைய முடியாது. இஞ்சி தட்டும் குழவியால் 10 நிமிடத்திற்கு தட்டி பிசையவும்.

  5. 5

    இப்பொழுது மாவு கொஞ்சம் தளர்வாகி இருக்கும். இதை நீள் வாக்கில் நீட்டி சிறு சிறு உருண்டைகளாக பிரிக்கவும்.

    பிரித்ததும் ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும். இல்லையெனில்,உடனே மாவு காய்ந்து விடும். உருட்ட வராது.

  6. 6

    இனி,மைதா அல்லது கோதுமை மாவு பரப்பி,அதன் மேல் வைத்து ஒவ்வொரு உருண்டைகளையும் தேவையான வடிவத்தில்,மெல்லியதாக விரிகவும்.

    மைதா/கோதுமை மாவு இல்லாமல்,விரிக்க முடியாது.அதன் மேல் வைத்தால் நன்றாக மெலிதாக விரிக்க வரும்.

  7. 7

    விரித்த ஒவ்வொரு வட்டங்களையும்,துணி அல்லது பேப்பரில் போட்டு வெயிலில் 20 நிமிடங்களுக்குள் எடுத்து விடவும்.

    நேரம் ஆகி எடுதால் ஓரங்கள் சுருண்டு விடும்.ஆனால் பொரிக்கும் போது நன்றாக தான் இருக்கும்.

  8. 8

    அல்லது மின்விசிறியின் அடியில் வைத்து 2 பக்கங்களும் நன்றாக காய வைத்து,ஈரப்பதம் இல்லாமல் எடுக்கவும்.

  9. 9

    இனி பொரித்துக் கொள்ளலாம்.

  10. 10

    அவ்வளவுதான். சத்தான உளுந்து அப்பளம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes