மசாலா முட்டை ஆம்லெட்(masala egg omelette recipe in tamil)

Fathima
Fathima @FathimaD
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 முட்டை
  2. 1/2 தக்காளி
  3. 1/2 வெங்காயம்
  4. 1 தேக்கரண்டி நூடுல்ஸ் மசாலா
  5. தேவையானஅளவு உப்பு
  6. 2 மேஜைக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
  7. 1/2 தேக்கரண்டி மிளகு தூள்
  8. 1 பச்சை மிளகாய்
  9. 1/4 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  10. 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  11. 2 மேஜை கரண்டி வெண்ணை

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு மிளகுத்தூள் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.

  2. 2

    தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி கலந்து வைத்துள்ள முட்டையை ஊற்றவும். கூடவே மஞ்சள்தூள் இஞ்சி பூண்டு விழுது நறுக்கிய கொத்தமல்லி இலைகள் நூடுல்ஸ் மசாலா சேர்த்து நன்றாக கலக்கவும்.

  3. 3

    தவாவை சூடு செய்து வெண்ணெய் சேர்த்து உருக்கி, கலந்து வைத்துள்ள முட்டைகளை தோசையாக ஊற்றி மிதமான தீயில் இரு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்த தக்காளி சாஸுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Fathima
Fathima @FathimaD
அன்று

Similar Recipes