எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. 2 மாம்பழங்கள்
  2. 2 வாழைப் பழங்கள்
  3. 1/4 கப் மாதுளை முத்துக்கள்
  4. 2டேபிள் ஸ்பூன் மேங்கோ கஸ்டர்டு பவுடர்
  5. 1/2 லிட்டர் ஃபுல் கிரீம் பால்
  6. 1/2 கப் கண்டன்ஸ்டு மில்க்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து அதில் பாலை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  2. 2

    பின்னர் பால் கொதிக்க ஆரம்பித்ததும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கலந்து விடவும். மிதமான சூட்டில் வைத்து கலக்கவும்.

  3. 3

    அரை கப் பாலில் காஸ்டர்ட் பவுடர் சேர்த்து கலந்து தயாராக வைக்கவும்.

  4. 4

    பாத்திரத்தில் கொதிக்கும் பாலுடன் கஸ்டர்டு பவுடர் கலந்து வைத்துள்ள பாலை சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி வேறு பௌலுக்கு மாற்றவும்.

  5. 5

    மேங்கோ விழுது அரைத்து வைத்துக்கொள்ளவும்.

  6. 6

    சூடு ஆறியதும் முதலில் தயார் செய்த கஸ்டர்ட் பால், அரைத்து வைத்துள்ள மேங்கோ விழுது, நறுக்கி வைத்துள்ள மாம்பழம், வாழைப் பழம்,மாதுளை முத்துக்கள் எல்லாம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  7. 7

    இப்போது மிகவும் சுவையான மேங்கோ கஸ்டர்ட் சுவைக்கத்தயார்.

  8. 8

    தயார் செய்த மேங்கோ கஸ்டார்ட் மேலே மேங்கோ துண்டுகள், மாதுளை முத்துக்கள் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes