தூதுவளை இலை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#c

பருப்பு சேர்த்து செய்வதால் ருசி மிகவும் நன்றாக இருக்கும் புளி சேர்க்க வேண்டாம் தக்காளி புளிப்பே நன்றாக இருக்கும் புளி சேர்ப்பதால் தூதுவளை இலையில் உள்ள மருத்துவ குணங்கள் இழந்து விடும்

தூதுவளை இலை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)

#c

பருப்பு சேர்த்து செய்வதால் ருசி மிகவும் நன்றாக இருக்கும் புளி சேர்க்க வேண்டாம் தக்காளி புளிப்பே நன்றாக இருக்கும் புளி சேர்ப்பதால் தூதுவளை இலையில் உள்ள மருத்துவ குணங்கள் இழந்து விடும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1 கப் தூதுவளை இலை
  2. 6 தக்காளி
  3. 1 கரண்டி வேகவைத்த துவரம்பருப்பு
  4. 1 லிட்டர் பருப்பு வேகவைத்த தண்ணீர்
  5. 25 பல் மலைப்பூண்டு
  6. 1 ஸ்பூன் சீரகம்
  7. 1 ஸ்பூன் மிளகு
  8. 2 பச்சைமிளகாய்
  9. சிறிதுகறிவேப்பிலை
  10. சிறிதுகொத்தமல்லி தழை
  11. தேவையான அளவுகல் உப்பு
  12. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  13. தாளிக்க:
  14. 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  15. 1 ஸ்பூன் கடுகு
  16. 10 வெந்தயம்
  17. 2 வரமிளகாய்
  18. சிறிதுகறிவேப்பிலை
  19. சிறிதளவுபெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தூதுவளை இலையை கழுவி சுத்தம் செய்து எண்ணெய் விட்டு வதக்கவும்

  2. 2

    பின் வதக்கிய தூதுவளை இலை மற்றும் தக்காளி பச்சைமிளகாய் சேர்த்து அரைக்கவும் தனியாக சீரகம் மிளகு பூண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்த சீரகம் மிளகு பூண்டு சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் அரைத்த தூதுவளை இலை சாறை வடிகட்டி ஊற்றவும்

  4. 4

    பின் உப்பு வேகவைத்த பருப்பு பருப்பு தண்ணீர் எல்லாம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும் பின் தாளிக்க எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு வெந்தயம் சேர்த்து பொரிய விடவும் பின் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும்

  5. 5

    சுவையான ஆரோக்கியமான மணமான தூதுவளை இலை ரசம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes