பாகு பதம் பார்க்காத அதிரசம்(athirasam recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

முதல் முயற்சி தோல்வி.இது என் இரண்டாம் முயற்சி.நன்றாக, சுவையாக வந்தது.

என் பையனுக்கு 3வயது முதல், இதுதான் dough nut என்று நம்ப வைத்துள்ளேன்.இப்பொழுது real doughnut தெரிந்தாலும்,அதைவிட இது மிகவும் பிடித்தமானது.இன்றும் இதன் பெயர் doughnut தான்.

பாகு பதம் பார்க்காத அதிரசம்(athirasam recipe in tamil)

முதல் முயற்சி தோல்வி.இது என் இரண்டாம் முயற்சி.நன்றாக, சுவையாக வந்தது.

என் பையனுக்கு 3வயது முதல், இதுதான் dough nut என்று நம்ப வைத்துள்ளேன்.இப்பொழுது real doughnut தெரிந்தாலும்,அதைவிட இது மிகவும் பிடித்தமானது.இன்றும் இதன் பெயர் doughnut தான்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
6பேர்
  1. 1கப் மாவு பச்சரிசி
  2. 3/4கப் இடித்த வெல்லம்
  3. 1/4கப் தண்ணீர்
  4. 3ஏலக்காய்
  5. 1பின்ச் உப்பு

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    வெல்லம் துருவக் கூடாது.இடித்துக் கொள்ளவேண்டும்.

  2. 2

    பச்சரிசியை நன்றாக கழுவி,2மணி நேரம் ஊற வைத்து,வடிகட்டி பின் காட்டன் துணியில் பரப்பி 10 நிமிடங்கள் நிழலில் காய விடவும்.

  3. 3

    கையால் தொட்டால்,அரிசி ஒட்டும்.தண்ணீர் ஒட்டக்கூடாது.

  4. 4

    இனி அரிசியை மிக்ஸி ஜாருக்கு மாற்றி,அதனுடன் ஏலக்காய் மற்றும் உப்பு சேர்த்து 95%மையாக அரைக்கவும்.

  5. 5

    அரைத்தமாவை சலிக்கவும். சலித்த மாவை மொத்தமாக கூட்டி வைத்து,மூடி வைக்கவும். இல்லையெனில்,மாவு வறண்டு விடும்.

  6. 6

    ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள சர்க்கரையுடன் 1/4கப் அளவு தண்ணீ சேர்த்து, சர்க்கரை கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும்,அதிக தீயில்,சரியாக 3நிமிடங்கள் வைத்து உடனே அடுப்பை அணைக்கவும்.

  7. 7

    மாவுடன்,வடிகட்டிய சர்க்கரை கரைசல் சேர்த்து கரண்டியால் கிளறவும்.ரிபன் மாதிரி வரும்.இனி சூடு ஆறியதும்,3 நாட்களுக்கு மூடி வைக்கவும்.

  8. 8

    பின் எடுத்து,வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவெரில் எண்ணெய் தடவி,மாவிலிருந்து சிறு உருண்டைகள் எடுத்து உருட்டி தட்டையாக தட்டவும்.

    மாவு இளக்கமாக இருந்தால் 30நிமிடங்கள் பிரிட்ஜ்-ல் வைக்கவும்.

  9. 9

    தட்டியவற்றை,மிதமான தீயில் இருக்கும் எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.ரொம்ப கலர் மாறும் வரை பொரித்தால்,பின்பு மொரு மொருப்பாகி விடும்.கவனம் தேவை.

  10. 10

    அவ்வளவுதான். சுவையான,பாகு பதம் பார்க்காத அதிரசம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes