அதிரசம்

தென் தமிழகத்தின் பாரம்பரிய இனிப்பு இது கிராம புறங்களில் திருவிழாவில் இதற்கு தனி இடம் உண்டு தீபாவளி அன்று இந்த அதிரசம் செய்து நோன்பு விரதம் கடைப்பிடித்து வருகின்றனர்
பொதுவாக இதற்கு மாவு பச்சரிசி என்று கேட்டு வாங்க வேண்டும் எங்க பாட்டி காலங்களில் இந்த மாவை கிளறி மண் பானையில் போட்டு வைத்து ஒரு வாரம் வரை நன்கு புளிக்க வைத்து சுடுவாங்க மிகவும் நன்றாக இருக்கும் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும் திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு நாள்பட வைத்து சாப்பிட,செய்து கொடுத்து அனுப்புவார்கள்
அதிரசம்
தென் தமிழகத்தின் பாரம்பரிய இனிப்பு இது கிராம புறங்களில் திருவிழாவில் இதற்கு தனி இடம் உண்டு தீபாவளி அன்று இந்த அதிரசம் செய்து நோன்பு விரதம் கடைப்பிடித்து வருகின்றனர்
பொதுவாக இதற்கு மாவு பச்சரிசி என்று கேட்டு வாங்க வேண்டும் எங்க பாட்டி காலங்களில் இந்த மாவை கிளறி மண் பானையில் போட்டு வைத்து ஒரு வாரம் வரை நன்கு புளிக்க வைத்து சுடுவாங்க மிகவும் நன்றாக இருக்கும் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும் திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு நாள்பட வைத்து சாப்பிட,செய்து கொடுத்து அனுப்புவார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி ஐ சுமார் மூன்று முறை அலசி பின் மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
பின் தண்ணீரை வடிகட்டி விட்டு சுத்தமான துணியில் பரவலாக போட்டு உலரவிடவும்
- 3
மின்விசிறி அடியில் போட்டு உலரவிடவும்
- 4
அரிசி காயந்து இருக்க வேண்டும் ஆனால் கைகளில் எடுத்து தொட்டு பார்த்தால் ஈரம் இருக்க வேண்டும்
- 5
அப்போது ஏலக்காய் சேர்த்து மாவு மிஷினில் கொடுத்து திரித்து கொள்ளவும்
- 6
அதை இரண்டு முறை நன்கு ஜலித்து கொள்ளவும்
- 7
இது பொதுவாக அதிரசம் செய்ய அடிப்படை அரிசி மாவு அரிசி ஈரப்பதம் இருக்கும் போது திரிக்க வேண்டும் இல்லை எனில் மெதுமெதுப்பு இருக்காது
- 8
பின் வெல்லத்தை துருவி வைக்கவும் (அளப்பதற்கு துருவிய வெல்லம் நல்லது, கூட குறைய அளந்து போட கூடாது)
- 9
பின் பச்சரிசி மாவை அளந்து இரண்டு கப் எடுத்து கொள்ளவும்
- 10
அதே போல் வெல்ல துருவலை இரண்டு கப் அளந்து எடுத்து கொள்ளவும்
- 11
இப்போது வெல்லத்துடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 12
வெல்லம் கரைந்ததும் அடுப்பை அணைத்து இரண்டு நிமிடம் கழித்து வடிகட்டி வைக்கவும்
- 13
பின் மீண்டும் வெல்ல கரைசலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
- 14
நன்கு நுரைத்து பின் கொதிக்கும் போது ஒரு தட்டில் தண்ணீர் வைத்து அதில் சில துளி விட்டு கைகளில் எடுத்து உருட்டி பார்க்கவும்
- 15
நன்கு மெத்தென்று உருட்ட வந்ததும் மாவை சிறிது சிறிதாக தூவி நன்கு விஸ்கால் அடித்து கிளறி இறக்கவும்
- 16
வடிகட்டிய வெல்லத்தை கொதிக்க விடும் போது இருந்து மாவை தூவி கிளறி இறக்கும் வரை மெல்லிய தீயில் வைத்து நிதானமாக செய்யவும்
- 17
மாவை ஒரு இரண்டு மூன்று நாட்கள் வரை வைத்து பின் நன்கு பிசைந்து கொள்ளவும்
- 18
பின் எண்ணெய் தடவிய ஒரு பிளாஸ்டிக் கவரில் மாவை சிறிது சிறிதாக எடுத்து தட்டவும்
- 19
மிக மெல்லியதாக இல்லாமலும் கணமாக இல்லாமலும் தட்டவும்
- 20
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
- 21
எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும் அப்போது தட்டி வைத்துள்ள அதிரசத்தை மெதுவாக போடவும்
- 22
நிதானமாக திருப்பி விடவும்
- 23
இரண்டு புறமும் பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்
- 24
பின் கரண்டியில் வைத்து படி அல்லது ஏதேனும் அடி பகுதி சமமான பொருள் வைத்து அதிரசத்தை அழுத்தி எஞ்சி இருக்கும் எண்ணெய் நீக்கி விடவும்
- 25
மிகவும் பொறுமையாக செய்ய வேண்டும் புதுசாக செய்யறவங்க ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்
- 26
கண்டிப்பாக மிதமான சூட்டில் எண்ணெய் இருக்க வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
அதிரசம் (Athirasam recipe in tamil)
#deepfryபாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று அதிரசம். தமிழ் நாட்டில் பண்டிகை நாட்களில் செய்வது வழக்கம். என்னுடைய முதல் முயற்சியாக நான் செய்திருக்கிறேன். மிகவும் சுவையாக இருந்தது. Natchiyar Sivasailam -
-
அதிரசம்(athirasam recipe in tamil)
#DEவருடா வருடம் கேதார கௌரி அம்மன் விரதத்தின் போது இந்த அதிரசம் செய்து அம்மனுக்கு படைப்போம். Gowri's kitchen -
அரிசி மாவு "களி"(riceflour kali recipe in tamil)
#HJ -பச்சரிசியை வறுத்து ரவை பதத்துக்கு பொடி செய்து செய்வது வழக்கமாக உள்ளது.. நான் பதப்படுத்தின பச்சரிசி மாவை சிவக்க வறுத்து அதை வைத்து களி செய்திருக்கிறேன்...மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நக்ஷத்திரத்தில் இந்த களி செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்வார்கள்... Nalini Shankar -
-
-
இனிப்பு வடை(inippu vadai recipe in tamil)
#CF6எங்கள் குடும்பங்களில் நலங்கு விருந்தில் இனிப்பு வடை கண்டிப்பாக இடம் பெறும். அதை எப்படி செய்வது எனப் பார்ப்போம். punitha ravikumar -
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#welcomeமறந்து போன பாரம்பரியமான இனிப்பு சுவையோ மிகவும் அற்புதமானது ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
அதிரசம்(athirasam recipe in tamil)
#CF2தமிழரின் பாரம்பரிய இனிப்பு இந்த அதிரசம் ..... இதன் எளிமையான செயல்முறை-யை இந்தபதிவில் காணலாம்.. karunamiracle meracil -
சர்க்கரை சீனி பொங்கல் (Sarkarai seeni pongal recipe in tamil)
#poojaதொடர்ந்து பூஜைகள் வருவதால் நான் அடிக்கடி இனிப்பு போன்றவற்றை சேர்த்துக் கொள்கின்றோம் தொடர்ந்து சாப்பிடுவதால் குறைந்த அளவு நெய் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் நெய் சொட்ட சொட்ட உள்ளதுபோல் செய்வதற்கு ஒரு வழி இருக்கின்றது .நாம் சர்க்கரை பொங்கல் செய்யும் பொழுது எவ்வளவு வெள்ளம் எடுத்துக் கொள்கிறோமோ அதில் முக்கால் பாகம் வெல்லமும் கால்பாகம் சீனியும் சேர்த்து செய்ய வேண்டும்.சர்க்கரை பொங்கல் நாம் எப்பொழுதும் செய்வதுபோல் செய்துவிட்டு ஏலக்காய் ஜாதிக்காய் தேவையான அளவு சீனி சேர்த்து மிக்ஸியில் அரைத்து சர்க்கரை பொங்கல் இறக்குவதற்கு 5 நிமிடம் முன்னால் சேர்த்து கலந்தால் அதிக அளவு நெய் சேர்த்து செய்ததுபோல் சுவையாக இருக்கும் இந்த முறையில்தான் நான் ஆயுத பூஜையில் சர்க்கரை சீனி பொங்கல் செய்துள்ளேன் . Santhi Chowthri -
-
உன்னியப்பம் (Unniappam recipe in tamil)
#keralaமாவை ரெடி செய்து புளிக்க வைக்க 8 மணி நேரம் ஆகும் காலையில் எழுந்ததும் ஊறவைத்து அரைத்து புளிக்க விட்டா மாலை நேரத்தில் ஸ்நேக்ஸாக சூடான டீ உடன் 20 நிமிடத்தில் ரெடி செய்து சூடாக பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
நெய்யப்பம் (Neiyappam recipe in tamil)
நெய்யப்பம் பச்சரிசி, வெல்லம் வைத்து செய்யும் ஒரு இனிப்பு சிற்றுண்டி.#kerala Renukabala -
-
அதிரசம்(athirasam recipe in tamil)
பச்சரியில் செய்யும் இந்த இனிப்பு மிகவும் பிரபலமானது. #ric punitha ravikumar -
-
பச்சரிசி மாவில் பால் கொழுக்கட்டை
#lockdown #book இந்த லாக்டவுனில் வீட்டில் ஏற்கனவே அரைத்து வைத்த பச்சரிசி மாவை வைத்து செய்தது. Revathi Bobbi -
தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil)
ஒரு மாதம் வரை கெடாமல் வைத்து இருக்கும் பிரயாணம் போகும்போது அவசரத்திற்கும் ஏற்ற ஒரு குழம்பு. இட்லி, சப்பாத்தி, சாதம் ஆகிய அனைத்திற்கும் சுவையாக இருக்கும்.#ATW3 #TheChefStory Mispa Rani -
மாம்பழ கொழுக்கட்டை
#3m#Mango... மாம்பழத்தின் ருசியே தனி.. இப்போ மாம்பழ சீசன்.. எல்லோருக்கும் பிடித்த சுவையில் மாம்பழத்தை வைத்து கொழுக்கட்டை செய்து பார்த்ததில் மிக சுவையாகவும், வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar -
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Sweet pidi Kozhukattai recipe in Tamil)
*வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிக எளிமையாக செய்திடலாம் இந்த கொழுக்கட்டையை.*இது ஆவியில் வேகவைத்து செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம், இரும்பு சத்து மிகுந்தது.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
-
அடை பிரதமன்(ada prathaman recipe in tamil)
@MeenaRameshஅடை பிரதமன் (100 வது)இந்த ரெசிபி மீனா ரமேஷ் அவர்கள் செய்தது.இதனை எனது 100வது ரெசிபியில் போட ஆசைப்பட்டு இந்த ரெசிபியை போட்டிருக்கேன். மேலும் இந்த ரெசிபிக்கு குக்பேட் சகோதரிகள்,டிப்ஸ்,வீடியோ மூலம் உதவிகள் செய்தார்கள். அவர்களுக்காகவும் இந்த ரெசிபியை போடுகின்றேன். Jegadhambal N -
அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil)
#goldenapron2கேரளாவில் வீட்டு வீட்டிற்கு பலாப்பழ மரம் இருக்கும் பலாப்பழத்தை பயன்படுத்தி சுவையான வித்தியாசமான சுழியன் மற்றும் அடையை பயன்படுத்தி பாயாசம் செய்து பாருங்கள் Sudha Rani -
மாவிளக்கு(maavilakku recipe in tamil)
ஆடி மாதம் வந்தாலே அம்மனுக்கு திருவிழா தான் இந்த மாவிளக்கு ஆடி மாதத்தில் மிகவும் பிரபலமான ஒன்று இத செய்யறது ஒரு கலை விதம் விதமாக வடிவம் கொடுத்து செய்வார்கள் Sudharani // OS KITCHEN -
-
#பாரம்பரிய முறையிலான ராகி அதிரசம்(கேழ்வரகு அதிரசம்)#anitha
மிகவும் சுலபமான முறையில் செய்யும் இந்த அதிரசம் வெல்லம் பாகுபதம் பார்க்க தேவையில்லை.சில நொடிகளில் செய்துவிடலாம். Akzara's healthy kitchen
More Recipes
கமெண்ட்