பலாக்கொட்டை கத்தரிக்காய் சாம்பார் (jack fruit brinjal sambar recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

பழங்காலத்து கிராமத்தில் செய்த இந்த பலாக்கொட்டை, கத்தரிக்காய் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும். சாதம், இட்லி, தோசை போன்ற எல்லா உணவுகளுடன் பொருத்தமாக இருக்கும்.
#vk

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
  1. 1/2 கப் துவரம் பருப்பு
  2. 10 பலாக்கொட்டைகள்
  3. 3 கத்தரிக்காய்
  4. 1உருளைக் கிழங்கு
  5. 1 பெரிய வெங்காயம்
  6. 1 நாட்டு தக்காளி
  7. 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி
  8. 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள்
  9. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. சிறிய நெல்லிக்காய் அளவுபுளி
  11. தேவையான அளவுஉப்பு
  12. தாளிக்க:
  13. 1 டீஸ்பூன் நெய்
  14. 1/4 டீஸ்பூன் கடுகு
  15. 5 சாம்பார் வெங்காயம்
  16. கறிவேப்பிலை
  17. பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    துவரம் பருப்பை நன்கு கழுவி குக்கரில் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

  2. 2

    பலாக்கொட்டை,வெங்காயம், தக்காளி, காய்கறிகளை நறுக்கி தயாராக வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பலாக்கொட்டை,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

  4. 4

    பின்னர் அத்துடன்,சாம்பார் வெங்காயம், உருளைக் கிழங்கை தோல் நீக்கி நறுக்கி சேர்க்கவும். நறுக்கிய கத்தரி,தக்காளி சேர்க்கவும்.

  5. 5

    பின்பு சாம்பார் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

  6. 6

    அத்துடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசல்,வேக வைத்து வைத்துள்ள பருப்பை சேர்த்து நன்கு கலந்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

  7. 7

    கடைசியாக தாளிப்பு கரண்டியை வைத்து நெய் சேர்த்து சூடானதும் கடுகு,வற்றல்,கறிவேப்பிலை,பெருங்காயம் தாளித்து சேர்க்கவும்.

  8. 8

    பின்னர் எடுத்து ஒரு பௌலில் சேர்த்து நறுக்கிய மல்லி இலை தூவினால் சுவையான பலாக்கொட்டை, கத்தரிக்காய் சாம்பார் சுவைக்கத்தயார்.

  9. 9

    இந்த சாம்பார் இட்லி, தோசை,சாதம் போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes