*நாகர் கோவில் கல்யாண வீட்டு வெள்ளரிக்காய், தயிர் பச்சடி*(marriage style vellari pachadi in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#VK
நாகர் கோவில் கல்யாணத்தில், இந்த ஸ்டைலில், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி செய்வார்கள்.செய்வது சுலபம். செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
6 பேர்
  1. வெள்ளரிக்காய் 2
  2. புளிக்காத கெட்டி தயிர் 1 கப்
  3. சீரகம் 1 ஸ்பூன்
  4. நறுக்கின தேங்காய் 1/4 கப்
  5. க.உப்பு ருசிக்கு
  6. ப.மியகாய் 1
  7. இஞ்சி 1 துண்டு
  8. தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன்
  9. உ.பருப்பு 2 ஸ்பூன்
  10. சி.மிளகாய் 2
  11. கருவேப்பிலை 1 ஆர்க்கு
  12. தே.எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
  13. பெரிய பூண்டு 2
  14. அலங்கரிக்க:- 1 ஸ்பூன் தே.எண்ணெய்
  15. தண்ணீர் 1/2 டம்ளர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    பௌலில், வெள்ளரிக்காயை தோலை சீவி விட்டு துண்டுகளாக நறுக்கி, உப்பு போடவும்.

  3. 3

    பின்,அடுப்பை மீடியத்தில் வைத்து, தேவையான தண்ணீர் விட்டு வேக விடவும்.

  4. 4

    சிறிய மிக்ஸி ஜாரில், தே.துண்டுகள், இஞ்சி, சீரகம்,ப.மிளகாய், போட்டு, அரைக்கவும்.

  5. 5

    தண்ணீர் சிறிது விட்டு மீண்டும் அரைக்கவும்.

  6. 6

    வெள்ளரிக்காய் முக்கால் பங்கு வெந்ததும், அரைத்த தை சேர்த்து, கிளறி, அடுப்பை சிறிய தில் வைத்து கொதிக்க விடவும்.

  7. 7

    கடாயில், தே.எண்ணெய் காய்ந்ததும்,கடுகு போடவும்.

  8. 8

    கடுகு பொரிந்ததும், கருவேப்பிலை, சி.மிளகாய் தாளிக்கவும்.

  9. 9

    அடுத்து, உ.பருப்பை போட்டு, கருகாமல்,சிவக்க வறுக்கவும்.

  10. 10

    பிறகு வெந்த வெள்ளரிக்காயை போட்டு, 5 நிமிடம் ஒன்று சேர கொதித்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.

  11. 11

    நன்கு ஆறியதும், தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.

  12. 12

    பிறகு, பௌலுக்கு மாற்றி, மேலே 1 ஸ்பூன் காய்ச்சாத, தே.எண்ணெய் விட்டு, மேலாக கிளறவும்.

  13. 13

    இப்போது, சுவையான,*நாகர் கோவில், கல்யாண வீட்டு வெள்ளரிக்காய், தயிர் பச்சடி* தயார்.தே.எண்ணெய் சேர்ப்பதால்,கூடுதல் சுவை.செய்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes