முள்ளங்கி பராத்தா(raddish paratha recipe in tamil)

#FC அவளும் நானும்.... @homecookie_270790 Ilakiya arun.
தோழி இலக்கியாவுடன்,இந்த combo ரெசிபி பகிர்ந்தது, மிகவும் மகிழ்ச்சியான தருணமாக உணர்கின்றேன்.
முள்ளங்கி பராத்தா(raddish paratha recipe in tamil)
#FC அவளும் நானும்.... @homecookie_270790 Ilakiya arun.
தோழி இலக்கியாவுடன்,இந்த combo ரெசிபி பகிர்ந்தது, மிகவும் மகிழ்ச்சியான தருணமாக உணர்கின்றேன்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் ஓமம்,தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி,பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசையவும்.
- 3
மாவு ஒன்று சேர பிசைந்ததும்,2ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக இழுத்து 15 நிமிடங்களுக்கு பிசையவும்.
- 4
பின் பிசைந்த மாவில் சிறிது எண்ணெய் தடவி குறைந்தது 30நிமிடங்கள் ஊற விடவும்.
- 5
ஊறும் நேரத்தில்,stuffing செய்து விடலாம்.
முள்ளங்கியின் தோல் நீக்கி,கழுவி துருவிக் கொள்ளவும். துருவிய முள்ளங்கியில்,சிறிதளவு உப்பு சேர்த்து 15நிமிடங்களுக்கு அப்படியே மூடி வைக்கவும்.
நீர்ச்சத்து கொண்ட காய் என்பதால்,தண்ணீர் வெளியேறும்.
- 6
முழுவதுமாக தண்ணீரை பிழிந்து விடாமல்,கைகளால் அள்ளியவாரு,கொஞ்சம் தண்ணீரோடு இருக்கும் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும்.
- 7
வாணலியில் எண்ணெய் விட்டு,சீரகம்,இஞ்சி, நறுக்கிய மிளகாய் தாளித்து,பின் முள்ளங்கியை சேர்க்கவும்.வேக வைக்க,அதில் இருக்கும் தண்ணீர் போதுமானது.
- 8
10நிமிடங்களுக்குள், வெந்து தண்ணீர் வற்றி விடும்.பின் மிளகாய் தூள்,கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கிளறி,பச்சை வாசம் போனதும்,மல்லித்தழை தூவி இறக்கவும்.
- 9
இனி,ஊறிய மாவையும், முள்ளங்கியையும் உருண்டைகளாக பிடித்துக் கொள்ளலாம்.
- 10
பிடித்த உருண்டைகளின் மேல் மாவு தூவி சிறிய வட்டமாக விரித்து,அதனுள் முள்ளங்கியை வைத்து மூடி,மீண்டும் மெதுவாக அழுத்தி விரிக்கவும்.இவ்வாறு, அனைத்து உருண்டைகளையும் விரிக்கவும்.
- 11
அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடானதும்,நெய்/எண்ணெய் சேர்த்து விரித்தவற்றை போட்டு அதன் மேல் எண்ணெய்/நெய் தடவி இரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.மிகவும் சுவையாக இருக்கும்.
- 12
அவ்வளவுதான். சுவையான,முள்ளங்கி பராத்தா ரெடி.
இதற்கு சிம்பிளாக தயிர் பச்சடி அல்லது தயிருடன் உப்பு,மிளகாய் தூள் கலந்து அதை தொட்டுக் கொண்டாலே சுவையாக இருக்கும். மேலும் அனைத்து கிரேவி வகைகளும் பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கத்தரிக்காய் தால்ச்சா(brinjal dalcha recipein tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun. Ananthi @ Crazy Cookie -
-
முள்ளங்கி & முருங்கைக்கீரை பராத்தா (Mullanki & Murungai Keerai Paratha recipe in tamil)
#ga4 #WEEK21 ஆரோக்கிய உணவு. Anus Cooking -
பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
#jan2குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Azhagammai Ramanathan -
-
-
-
-
அவல் பராத்தா (poha paratha in tamil)
#cf6 இந்த பராத்தா மிகவும் மிருதுவாக இருக்கும்... நீங்களும் செய்து பாருங்க.. Muniswari G -
பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தி (Spinach coconut rolled chapathi recipe in tamil)
#FCநானும் அவளும் தலைப்பில் கவிதாவும் நானும் சேர்ந்து பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தியும் மஷ்ரூம் கிரேவியும் சமைத்துள்ளோம்.இந்த சப்பாத்தி எனது முதல் முயற்சி,மிகவும் சுவையாக உள்ளது. Renukabala -
டிக்கர் பராத்தா(Tikker Paratha Recipe in Tamil)
#cookwithfriends#santhichowdry#maincourse#cooksnap என் தோழி சாந்தி வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் எனக்காக டிக்கர் பராத்தா செய்து கொடுத்தார்கள் மிகவும் சுவையாக வித்தியாசமான ரெசிபி யாகவும் இருந்தது. வெகு நாட்களாக நான் இதை செய்ய முயற்சி செய்தேன்.நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்த ரெசிபியை செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். Dhivya Malai -
-
முள்ளங்கி ஸ்டஃவிங் புரோட்டா (Mullanki stuffing parotta recipe in tamil)
#ap ஆந்திராவில் டயட் உணவில் ஸ்டஃவிங் சப்பாத்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. Siva Sankari -
ஹைதராபாத் ஸ்டைல் முட்டை கிரேவி(hydrebad style egg gravy recipe in tamil)
#FC அவளும் நானும்.... @homecookie_270790 Ilakiya arun.தோழி இலக்கியா செய்து கேட்ட முள்ளங்கி பராத்தாவிற்க்கு துணையாக, நான் முட்டை கிரேவி செய்தேன்.இது,எப்பொழுதும் போல் அல்லாமல் தயிரை முக்கியப் பொருளாகக் கொண்டு செய்துள்ளேன். எல்லா வகையான சப்பாத்தி/மசாலா சப்பாத்தி மற்றும் நாண் வகைகளுக்கு அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
-
ஆலூ பாலக் பராத்தா (Aloo palak paratha recipe in tamil)
#apஆலூ பாலக் பராத்தா ஹைதெராபாத் ஹோட்டல்லில் பேமஸ். குழந்தைகள் விரும்பி உண்ணும் ஹெல்த்தி உணவு. உருளை மற்றும் பாலக் கீரை வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்து மிக்க உணவு. Manjula Sivakumar -
-
முள்ளங்கி கீரை சப்பாத்தி / Radish Spinach Chapathi recipe in tamil
முள்ளங்கி கீரை சப்பாத்தி Umavin Samayal -
சாதம் & மொச்சை கத்திரிக்காய் குழம்பு(rice,mocchai katthirikkai kulambu recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.நான் குழம்பு வைக்க,தோழி இலக்கியா சாதமும் பொரியலும் சமைக்க,அதை cookpad உறவுகளின் கண்களுக்கு விருந்தாக்குகின்றோம். ருசியுங்கள்.மொச்சையில் கட்டுங்கடங்காத பயன்கள் உண்டு.உடலுக்குத் தேவையான புரதம்,வைட்டமின்,நார் சத்துக்கள் உள்ளது.இது சாதம் மட்டுமல்ல, இட்லிக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
கார அடை(kara adai recipe in tamil)
#FCநானும் அவளும் காம்போவில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் இனைந்து கார அடை மற்றும் அவியல் சமைத்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
Green onion masalaa paratha (Green onion masalaa paratha recipe in tamil)
#Ga4 # kids3வெங்காய தாள் கொண்டு செய்த சப்பாத்தி. Meena Ramesh -
-
வால்நட் மிளகு ஸ்டாப்ட் பராத்தா
#walnuttwists -.... வால்நட்டில் உடல் ஆரோகியத்துக்கேத்த நிறைய சத்துக்கள் இருக்கின்றன...இந்த காலகட்டத்தில் மிளகும் சாப்பாட்டில் சேர்த்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..ஆகையால் வால்நட், மிளகு சேர்த்து பராத்தா செய்துள்ளேன்.. Nalini Shankar -
More Recipes
கமெண்ட் (4)