அரிசி பருப்பு உப்புமா (Rice n Dhal Upma) (Arisi paruppu upma recipe in tamil)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#ilovecooking
நம் வீட்டில் உள்ள அரிசி மற்றும் பருப்பை வைத்து செய்யும் சத்தான சுலபமான உப்புமா.

அரிசி பருப்பு உப்புமா (Rice n Dhal Upma) (Arisi paruppu upma recipe in tamil)

#ilovecooking
நம் வீட்டில் உள்ள அரிசி மற்றும் பருப்பை வைத்து செய்யும் சத்தான சுலபமான உப்புமா.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 பேர்
  1. ஒன்றரை கப்,இட்லி அரிசி
  2. அரை கப்,சாப்பாட்டு அரிசி
  3. முக்கால் கப்,துவரம் பருப்பு
  4. ஒரு ஸ்பூன்,மிளகு
  5. ஒரு ஸ்பூன்,சீரகம்
  6. பெரிய வெங்காயம் ஒன்று,
  7. பச்சை ‌மிளகாய் ஒன்று,
  8. ஒரு ஸ்பூன்,நெய்
  9. தேவையானஅளவு உப்பு,
  10. தேவையானஅளவு தண்ணீர்,
  11. தாளிக்க:
  12. கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் இட்லி அரிசி மற்றும் சாப்பாட்டு அரிசியை கழுவி சுத்தம் செய்து ஒரு நாள் முழுவதும் நன்றாக ஈரமில்லாமல் காயவைக்க வேண்டும்.

  2. 2

    காய வைத்த அரிசியுடன் துவரம் பருப்பு, மிளகு, சீரகம் சேர்த்த கரகரப்பாக ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரைத்த ரவையில் தேவையானவை மட்டும் எடுத்து உப்புமா செய்வதற்காக வாணலியில் போட்டு மணம் வரும் வரை வறுக்கவும்.

  4. 4

    அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.

  5. 5

    பிறகு ஒரு கப் ரவை போடுவதற்கு, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, கல்லுப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

  6. 6

    தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் வறுத்து வைத்துள்ள அரிசி பருப்பு ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் கிளறி வேகவிடவும். தண்ணீர் வற்றியதும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும்.

  7. 7

    சத்தான அரிசி பருப்பு உப்புமா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes