எக் கீமா தோசை (egg keema dosa recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#ds இந்த தோசை சாப்பிடுவதற்கு மதுரை கறி தோசை போலவே இருக்கும்... இதில் முட்டைக்கு பதில் பனீர் கூட வைத்து செய்யலாம்...

எக் கீமா தோசை (egg keema dosa recipe in Tamil)

#ds இந்த தோசை சாப்பிடுவதற்கு மதுரை கறி தோசை போலவே இருக்கும்... இதில் முட்டைக்கு பதில் பனீர் கூட வைத்து செய்யலாம்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 2கப் தோசை மாவு
  2. 4வேக வைத்த முட்டை
  3. 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  4. 1ஸ்பூன் கடுகு
  5. 1பெரிய வெங்காயம்
  6. 1பெரிய தக்காளி
  7. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  9. 1/2ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  10. 1/2ஸ்பூன் கரம் மசாலா தூள்
  11. 1/2ஸ்பூன் மிளகு தூள்
  12. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  13. தேவையானஅளவு உப்பு
  14. சிறிதுகொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்

  2. 2

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் இஞ்சி பூண்டு விழுது வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்

  3. 3

    அதில் பொடி வகைகள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    எல்லாம் ஒன்றாக வதங்கியதும் அதனுடன் துருவி வைத்த மஞ்சள் கரு இல்லாத வெள்ளைக்கரு மட்டும் சேர்க்கவும்

  5. 5

    எல்லாம் ஒன்றாகக் கலந்ததும் இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்... இந்த மசாலாவை சப்பாத்திக்குள் வைத்தும் நாம் செய்யலாம்..

  6. 6

    தோசைக்கல்லில் தடிமனாக சிறிய தோசையாக ஊற்றி அதன் மேல் இந்த மசாலாவை வைத்து அதன் மேல் சிறிது வெங்காயத்தையும் கொத்தமல்லி இலையையும் தூவவும்..

  7. 7

    அடிப்பகுதி நன்றாக வெந்ததும் திருப்பிப் போட்டு மேல் பகுதியும் நன்றாக வேகும் படி வேகவிட்டு எடுக்கவும்

  8. 8

    இப்போது சூடான சுவையான முட்டை கீமா தோசை தயார்... இதை அப்படியே சாப்பிடலாம் இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவைப்படாது..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes