எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. கேக் செய்ய:
  2. 6 முட்டை
  3. 250 கிராம் சர்க்கரை
  4. 250 கிராம் மைதா
  5. 50 கிராம் கோகோ தூள்
  6. 5 கிராம் பேக்கிங் பவுடர்
  7. 30 கிராம் கேக் ஜெல்
  8. 20 கிராம் நெஸ்கேபி காஃபி பவுடர்
  9. 3+ 2 டேபிள்ஸ்பூன் சுடு தண்ணீர்
  10. 2 ஸ்பூன் சாக்லேட் எசென்ஸ்
  11. 100 மில்லி சன்ப்ளவர் ஆயில்
  12. க்ரீம் செய்ய:
  13. 100 கிராம் விப்டு க்ரீம் பவுடர்
  14. 100 மில்லி பால்
  15. சாக்லேட் ட்ரபுள் செய்ய:
  16. 200 மில்லி ப்ரஷ் க்ரீம்
  17. 75 கிராம் சாக்லேட் சிப்ஸ்
  18. 3 டேபிள்ஸ்பூன் பால்
  19. 1 டேபிள்ஸ்பூன் பட்டர்
  20. அலங்கரிக்க:
  21. ஜெம்ஸ்
  22. டைரிமில்க் சாட்ஸ்
  23. சாக்லேட் சிரப் செய்ய:
  24. 1/2 கப் தண்ணீர்
  25. 1/4 கப் சர்க்கரை
  26. 1/2 ஸ்பூன் சாக்லேட் எசென்ஸ்
  27. 1 ஸ்பூன் காஃபி டிகாஷன்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    கேக் செய்ய

    தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக அளந்து எடுத்து வைக்கவும் சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்

  2. 2

    மைதா உடன் பேக்கிங் பவுடர் கோகோ தூள் சேர்த்து மூன்று முறை நன்றாக ஜலித்து கொள்ளவும்

  3. 3

    கேக் ஜெல் உடன் 3 டேபிள்ஸ்பூன் வெதுவெதுப்பான நீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்

    காஃபி பவுடர் உடன் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்

  4. 4

    முட்டையை உடைத்து ஊற்றி பீட் செய்யவும்

  5. 5

    பின் சாக்லேட் எசென்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்யவும் பின் பொடித்த சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்

  6. 6

    சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து முட்டை உடன் நன்றாக 15 நிமிடங்கள் வரை பீட் செய்யவும்

  7. 7

    பின் கரைத்துக் வைத்துள்ள கேக் ஜெல்லை சேர்த்து நன்கு பீட் செய்யவும்

  8. 8

    பின் காஃபி டிகாஷன் சேர்த்து நன்கு பீட் செய்யவும்

  9. 9

    எல்லாமே சேர்ந்து ரிப்பன் பதத்தில் வரும் வரை நன்றாக பீட் செய்து கொள்ளவும் பின் பீட்டரை நிறுத்தி விட்டு கரண்டியால் கலந்து கொள்ளவும்

    ஓவனை 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வரை சூடாக்கவும்

  10. 10

    பின் ஜலித்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக தூவி கலந்து கொள்ளவும்

    காற்றுக்குமிழிகள் வெளியேறாதவாறு ஒரு புறமாகவே கலந்து கொள்ளவும்

  11. 11

    கடைசியாக எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  12. 12

    பின் பட்டர் தடவி பட்டர் பேப்பர் விரித்து ரெடியாக உள்ள ட்ரேயில் ஊற்றவும்

    பின் சமமாக தட்டி விடவும்

  13. 13

    மீதமுள்ள மாவை சின்னச் சின்ன கப்பில் கப் கேக் ஆக ஊற்றி கொள்ளவும்

    பின் சூடான ஓவனில் உள்ளே வைத்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்

  14. 14

    பின் 30 நிமிடங்கள் கழித்து 5 நிமிடங்கள் வரை அந்த சூட்டிலே வைத்து பின் வெளியே எடுத்து ஆறவிடவும்

  15. 15

    சற்று ஆறியதும் ட்ரேயில் இருந்து வெளியே எடுத்து கவிழ்த்து பட்டர் பேப்பரை உரித்து வைக்கவும்

  16. 16

    நல்ல மெதுமெதுப்பான கேக் ரெடி இதை 2 மணி நேரம் வரை நன்றாக ஆறவிடவும்

  17. 17

    சாக்லேட் ட்ரபுள் செய்ய:

    ப்ரஷ் க்ரீம் ஐ பேனில் ஊற்றி கொதிக்க விடவும்

  18. 18

    கொதித்ததும் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் சாக்லேட் சிப்ஸ் நன்றாக கரைந்ததும் பால் சேர்த்து நன்கு கலந்து விடவும்

  19. 19

    பின் பட்டர் சேர்த்து கலந்து இறக்கி ஆறவிடவும்

  20. 20

    க்ரீம் செய்ய ஐஸ்கட்டி மேல் விப்டு க்ரீம் பவுடர் ஐ கொட்டவும் பின் நல்ல பிரிட்ஜில் வைத்து குளிரவிட்ட ஜில் பாலை ஊற்றவும் பீட்டர் கம்பியையும் நன்கு பிரிட்ஜில் வைத்து ஜில்லென்று எடுத்து பீட் செய்யவும்

  21. 21

    8 நிமிடங்கள் வரை மீடியம் ஸ்பீடில் பீட் செய்யவும் இந்த பதத்தில் பீட் செய்து பிரிட்ஜில் 2 மணி நேரம் வரை வைக்கவும்

    சாக்லேட் சிரப் செய்ய தண்ணீர் உடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும் பாகு எல்லாம் வேண்டாம் சர்க்கரை கரைந்தால் போதும் காஃபி டிகாஷன் மற்றும் சாக்லேட் எசென்ஸ் சேர்த்து கலந்து இறக்கி ஆறவிடவும்

  22. 22

    பின் ஆறவைத்த கேக் ஐ கட் செய்து கொள்ளவும் பின் ஒரு லேயர் கேக் மேல் சாக்லேட் சிரப் ஐ ஊற்றவும்

  23. 23

    பின் ரெடியாக உள்ள க்ரீம் ஐ கேக் மேற்புறம் மட்டும் தடவவும் பின் ரெடியாக உள்ள சாக்லேட் ட்ரபுளை ஊற்றவும் பின் அடுத்த லேயர் கேக் ஐ வைக்கவும்

  24. 24

    ரவுண்ட் ட்ரேயில் செய்த நடுவில் குழி உள்ள கேக் ஃபீஸ் ஐ வைக்கவும் பின் அதன் மேல் சாக்லேட் சிரப் ஐ ஊற்றவும்

    அந்த குழியில் ஜெம்ஸ் டைரி மில்க் சாட்ஸ் ஐ கொட்டவும்

  25. 25

    பின் க்ரீம் கொண்டு தடவவும் பின் அடுத்த லேயர் கேக் ஐ வைக்கவும் பின் அதன் மேல் சாக்லேட் சிரப் ஐ ஊற்றவும்

  26. 26

    பின் கேக் மேற்புறம் மட்டும் சைடு முழுவதும் க்ரீம் ஐ தடவவும்

    மீதியுள்ள கேக் (குழி உள்ள ஃபீஸ்) உடன் சாக்லேட் ட்ரபுள் 4 டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும் உதிர் உதிரான கேக் க்ரம்ஸ் ரெடி

  27. 27

    கேக் க்ரம்ஸ் ஐ பரவலாக கேக் முழுவதும் தூவி விடவும்

  28. 28

    பின் இதை பிரிட்ஜில் 2 மணி நேரம் வரை வைத்து செட் செய்து கொள்ளவும்

    சுவையான ஆரோக்கியமான சாக்லேட் ட்ரபுள் கேக் ரெடி

    நீங்களும் இதை செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes