* மசால் தோசை *(masal dosai recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#ds
தோசை மாவை வைத்துக் கொண்டு விதவிதமாக ரெசிபிக்கள் செய்யலாம்.நான் தோசை மாவை வைத்து, மசால் தோசை செய்தேன்.சுவையாக இருந்தது.

* மசால் தோசை *(masal dosai recipe in tamil)

#ds
தோசை மாவை வைத்துக் கொண்டு விதவிதமாக ரெசிபிக்கள் செய்யலாம்.நான் தோசை மாவை வைத்து, மசால் தோசை செய்தேன்.சுவையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2பேர்
  1. 1 கப்இட்லி புழுங்கலரிசி
  2. 1/2 கப்பச்சிரிசி
  3. 2 டேபிள் ஸ்பூன்முழு உளுந்து
  4. 1 டேபிள் ஸ்பூன்வெந்தயம்
  5. ருசிக்குஉப்பு
  6. 1/4 கப்ஆலூ காரக் கறி
  7. தேவைக்குதண்ணீர்
  8. தேவையான அளவுஎண்ணெய்
  9. 1 டீ ஸ்பூன்சர்க்கரை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    இட்லி புழுங்கலரிசி, பச்சரிசி, உ.பருப்பு,வெந்தயம் ஆகியவற்றை, வெதுவெதுப்பான தண்ணீர் விட்டு, 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    ஊறியதும்,தண்ணீரை வடித்து விட்டு பெரிய மிக்ஸி ஜாரில் அரிசி, சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து, உப்பு போட்டு நன்கு கலந்து, மைய அரைத்து பௌலில் எடுக்கவும்.

  3. 3

    அரைத்த மாவை 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

  4. 4

    உருளை, மசாலா காரக் கறி செய்வதற்கான ரெசிபியை போட்டுள்ளேன்.அதன்படி செய்துக் கொள்ளவும்.

  5. 5

    அடுப்பை மீடியத்தில் வைத்து, தவாவில், எண்ணெய் விட்டு, மாவில், சர்க்கரை 1 டீ ஸ்பூன் சேர்த்து, நன்கு கலந்து, கரண்டியால் சற்று திக்காக ஊற்றவும்.

  6. 6

    மசாலாவை மேலே,நன்கு பரத்தி, எண்ணெய் ஊற்றி, திருப்பி போடாமல் ஒரு பக்கம் நன்கு சிவக்க எடுக்கவும்.

  7. 7

    இப்போது, சுடசுட, மொறு மொறுப்பான,* மசால் தோசை*தயார்.செய்து பார்த்து அசத்தவும்.இதற்கு சைட் டிஷ் தேவையில்லை.சர்க்கரை சேர்ப்பதால்,தோசை சிவந்து, மொறு பொறுப்பாக வரும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes