உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்(potato cheese balls recipe in tamil)

Farhana Sheriff
Farhana Sheriff @farhanasheriff

#HF

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்(potato cheese balls recipe in tamil)

#HF

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
6 நபர்
  1. 50 கிராம் - நறுக்கிய சீஸ்
  2. 2 மேஜைக்கரண்டி - துருவிய சீஸ்
  3. 4- வேகவைத்த உருளைக்கிழங்கு
  4. 1/2 மேஜைக்கரண்டி - மிளகாய் தூள்
  5. சிறிதளவு- கொத்தமல்லி இலை
  6. தேவையானஅளவு - உப்பு

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    சீஸ்சை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பிறகு உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.

  3. 3

    கலந்த கலவையை தட்டையாக தட்டி அதனுள் சீஸ் கட்டியை வைத்து உருண்டையாக உருட்டவும்.

  4. 4

    பிறகு பாத்திரத்தில் மைதா மாவு சேர்த்து தண்ணீர் விட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும். உருட்டிய உருண்டையை அதில் போட்டு எடுத்துக் கொள்ளவும்.

  5. 5

    தயாராக வைத்துள்ள பிரெட் துகள்களில் மைதா மாவில் முக்கி எடுத்து உருண்டையை சேர்ந்து நன்றாக உருட்டவும்.

  6. 6

    அனைத்து மாவையும் இதே போல் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

  7. 7

    பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டைகளாக சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். தீயின் அளவை மிதமாக வைத்துக்கொள்ளவும்.

  8. 8

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் சுட சுட தயார்.

  9. 9

    தக்காளி மற்றும் மிளகாய் சாஸுடன் பரிமாற சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Farhana Sheriff
Farhana Sheriff @farhanasheriff
அன்று

Similar Recipes