எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
  1. 1 பாக்கெட் வரகு சேமியா
  2. 1/2 கப் சாம்பார் வெங்காயம்
  3. 3 வற்றல் மிளகாய்
  4. கறிவேப்பிலை
  5. 1/2 டீஸ்பூன் கடுகு
  6. 1/2 டீஸ்பூன் உளுந்து பருப்பு
  7. 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
  8. தேவையான அளவுஉப்பு
  9. மல்லி இலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வரகு சேமியாவை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

  2. 2

    தக்காளியை நறுக்கி விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின்னர் நறுக்கிய வெங்காயம்,மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  5. 5

    நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து,உப்பு கலந்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

  6. 6

    பின்னர் வேக வைத்து வைத்துள்ள வரகு சேமியாவை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, பின்பு இரண்டு நிமிடங்கள் மூடி வைத்து வதக்கவும்.

  7. 7

    கடைசியாக நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும். இப்போது மிகவும் சுவையான சத்தான வரகு தக்காளி சேமியா சுவைக்கத்தயார்.

  8. 8

    தயாரான வரகு தக்காளி சேமியாவை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும்.

  9. 9

    இப்போது மிகவும் சிறு தானிய உணவான வரகு தக்காளி சேமியா சுவைக்கத் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட்

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes