பாலக் கோகனட் ரோல்டு  சப்பாத்தி (Spinach coconut rolled chapathi recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#FC
நானும் அவளும் தலைப்பில் கவிதாவும் நானும் சேர்ந்து பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தியும் மஷ்ரூம் கிரேவியும் சமைத்துள்ளோம்.
இந்த சப்பாத்தி எனது முதல் முயற்சி,மிகவும் சுவையாக உள்ளது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
3 பேர்
  1. 2 கப் கோதுமை மாவு
  2. 1 கட்டு பாலக் கீரை
  3. 2 பச்சை மிளகாய்
  4. 1 டீஸ்பூன் சீரகம்
  5. 1/2 கப் தேங்காய் துருவல்
  6. தேவையான அளவுஉப்பு
  7. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    பாலக் கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி தயாராக வைக்கவும்.

  2. 2

    பின்னர் கொதிக்கும் தண்ணீரில் போட்டு எடுக்கவும்,அத்துடன் வேக வைத்த, பச்சை மிளகாய்,சீரகம்,கல் உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைக்கவும்.

  3. 3

    பின்னர் ஒரு பௌலில் கோதுமை மாவு,பாலக் விழுது, எண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். கையால் பிசைந்து சப்பாத்தி செய்ய மாவு தயார் செய்யவும்.

  4. 4

    பின்னர் எடுத்து சப்பாத்தி கல்லில் சிறிய உருடைகளாக வைத்து சப்பாத்தி ரோலர் வைத்து சிறிய சபாத்திகளை தேய்க்கவும்.

  5. 5

    சப்பாத்தி தேய்த்து முடிந்ததும் அதன் மேல் ஃப்ரெஷ் தேங்காய் துருவல் தூவி பின்னர் ரோலர் வைத்து அழுத்தி உருட்டினால் பாலக் கோகோநட் ரோல்டு சப்பாத்தி சுட தயார்.

  6. 6

    பின்னர் தோசை தவாவை எடுத்து ஸ்டவ்வில் வைத்து சூடானதும் தயாராக ஊருட்டி வைத்துள்ள சப்பாத்திகளை போட்டு,இருபுறமும் திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.

  7. 7

    இப்போது மிகவும் சுவையான, சத்தான, வித்தியாசமான பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தி சுவைக்கத் தயார்.

  8. 8

    நானும் கவிதாவும் சேர்ந்து பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தியும் மஷ்ரூம் கிரேவியும் சமைத்து சமர்பித்துள்ளோம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes