விரத ஸ்பெஷல்,*கல்யாண வீட்டு ஃபுரூட் ரவா கேசரி*(fruit rava kesari recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#VT
இந்த கேசரியை நான் வரலக்ஷ்மி நோன்பிற்காக செய்தேன்.பண்டிகைக்காக வாங்கும் பழங்களை வீணடிக்காமல், இவ்வாறு பயனுள்ள ஸ்வீட்டாக மாற்றலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
12 பேர்
  1. 1 கப்ரவை
  2. 1கப்சர்க்கரை
  3. 1/4 கப்பசு நெய்
  4. 1மாம்பழம் (சிறியது)
  5. 1ஆப்பிள்
  6. 1மாதுளம் பழம்
  7. 1 ஸ்பூன்கஸ்டர்டு பவுடர்
  8. 1 டீ ஸ்பூன்மஞ்சள் ஃபுட் கலர்
  9. 10முந்திரி
  10. 10திராட்சை
  11. 13/4 டம்ளர்தண்ணீர்
  12. 1 சிட்டிகைஉப்பு ருசிக்கு
  13. அலங்கரிக்க:- பழத்துண்டுகள்,
  14. 1 ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    மாம்பழம், ஆப்பிள் இரண்டையும், சுத்தம் செய்து, துண்டுகளாக நறுக்கிக் கொண்டு, மாதுளை முத்துக்களை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில், 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும், முந்திரி, திராட்சையை கருகாமல் வறுத்து, தட்டில் போடவும்.

  3. 3

    மீதமுள்ள நெய்யில் ரவையை, பொன்னிறமாக வறுக்கவும்.

  4. 4

    தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, வறுத்த ரவையில் ஊற்றி,1 சிட்டிகை உப்பு போட்டு, ரவையை வேக விடவும்.

  5. 5

    சிறிது வெந்ததும் சர்க்கரையை போடவும்.சர்க்கரை கரைந்து கொதித்ததும் கஸ்டர்டு பவுடரை சேர்க்கவும்.

  6. 6

    பிறகு ஒன்று சேர, வெந்ததும்,2 டேபிள் ஸ்பூன் நெய் விடவும்.

  7. 7

    வெது வெதுப்பான தண்ணீரில், மஞ்சள் ஃபுட் கலரை கரைத்து விடவும்.

  8. 8

    ஒன்று சேர வெந்ததும், முதலில் மாம்பழத்தை போடவும்.

  9. 9

    அடுத்து, ஆப்பிளை போடவும்.

  10. 10

    கடைசியாக மாதுளை முத்துக்களை போடவும்.

  11. 11

    5 நிமிடம் பழங்கள் வெந்ததும், வறுத்த முந்திரி திராட்சையை போடவும்.மீதமுள்ள நெய்யை விட்டு அடுப்பை நிறுத்தி விடவும்.

  12. 12

    ஒன்று சேர அனைத்தையும் கிளறி,பௌலுக்கு மாற்றவும்.

  13. 13

    மேலே 1 ஸ்பூன் நெய், நறுக்கின பழங்களை போட்டு அலங்கரிக்கவும். இப்போது, சுவையான சுலபமான,*கல்யாண வீட்டு ஃபுரூட் ரவா கேசரி* தயார்.விருப்பப்பட்டால் பச்சை ஃபுட் கலர் சேர்த்தும் செய்யலாம்.பசு நெய்யில் செய்வதால், கூடுதல் சுவை.சத்தும் அதிகம்.பழங்களை வீணாக்காமல் இப்படி செய்து பார்த்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes