அவல் நாட்டு சக்கரை லட்டு(aval laddu recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#KJ -
கிருஷ்ணஜெயந்தி தினத்தில் கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல் வைத்து பூஜைக்கு பிரசாதம் செய்வார்கள். சுலபமாக செய்யக்கூடிய மிக சுவையான அவல் லட்டு செய்து பூஜை செய்வது என்னுடைய வழக்கம்... செய்முறையை உங்களுடன் பக்கிர்ந்துள்ளேன்....

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
10-12 பரிமாறுவத
  1. 1 கப் மெல்லிசான அவல்
  2. 3/4 கப் நாட்டு சக்கரை
  3. 1/2 கப் தேங்காய்
  4. 4 ஸ்பூன் நெய்
  5. 10-12 உடைச்ச முந்திரி
  6. 10 காய்ந்த திராக்ஷை
  7. 1/2 ஸ்பூன் ஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையானவற்றை எடுத்து கொள்ளவும். ஸ்டவ்வில் வாணலி வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராக்ஷை வறுத்து எடுத்துக்கவும்

  2. 2

    அதே வாணலியில் அவல் சேர்த்து பொரிந்து வரும்வரை மீடியம் ஹீட்டில் வறுத்து எடுத்து ஆற விடவும்

  3. 3

    அதே வாணலியில் தேங்காய் துருவல் சேர்த்து ஈர பதம் போக வறுத்து எடுத்து அதையும் தனியாக ஆற விடவும்

  4. 4

    வறுத்த அவலை மிக்ஸியில் நைஸ் ரவை போல் பொடித்து எடுத்த பிறகு அதே மிக்ஸியில் தேங்காய் நாட்டு சக்கரை சேர்த்து ஒரு சுத்து சுத்தி எடுக்கவும்

  5. 5

    பொடித்த வெல்ல கலவையை, அவல் ரவை யுடன் நன்கு கலந்துக்கவும், முந்திரி திராஷை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

  6. 6

    மீதி இருக்கும் நெய் சேர்த்து சின்ன உருண்டைகள் பிடித்துக்கவும்.. இப்பொழுது அருமையான அவல் நாட்டு சக்கரை லட்டு தயார்... கிருஷ்ணருக்கு பிரசாதம் வைத்து நைவேத்தியம் செய்து சுவைக்கவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes