ஆற்காடு மக்கன் பேடா(arcot makkhan peda recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

ஸ்வீட்லெஸ் கோவா வைத்து செய்யும் இந்த ஸ்வீட் மிகவும் பிரபலமானது. #Thechefstory #ATW2

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
10-15 நபர்கள்
  1. 200 கிராம் ஸ்வீட்லெஸ் கோவா
  2. 4டேபிள் ஸ்பூன் மைதா
  3. 1டீஸ்பூன் நெய் 300 கிராம் சர்க்கரை
  4. 1டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  5. 6-10 குங்குமப்பூ
  6. 4 முந்திரி, 4 பாதாம், 6 பிஸ்தா பொடியாக கட் செய்தது
  7. தேவையான அளவுபொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கோவாவை தேய்த்து மிருதுவாக்கவும். பின் அதில் மைதா, நெய் சேர்த்து நன்கு கலந்து பிசைந்து 10நிமிடம் மூடி வைக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரையையும், 500மிலி தண்ணீர் சேர்த்து கொதித்ததும் பால் சிறிது சேர்த்து அழுக்கை நீக்கிவிட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.

  3. 3

    ஊறிய மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் பாதாம், முந்திரி, பிஸ்தா சிறிதளவு வைத்து உருட்டி லேசாக தட்டி வைக்கவும். இதேப் போல் எல்லா மாவையும் தயார் செய்து வைக்கவும்.

  4. 4

    வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி காய்ந்ததும் சிம்மில் வைத்து பேடாவைப் போட்டு பொரித்து 5 நிமிடம் ஆற விடவும். பின் பாகில் ஊற வைக்கவும். 30 நிமிடங்கள் கழித்து ரெடியானமக்கன் பேடா மேல் பிஸ்தா தூளைத் தூவிப் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes