சீரக சம்பா புலாவ்(seeraga samba pulao recipe in tamil)

KARTHI KA
KARTHI KA @KARTHIKAAA

சீரக சம்பா புலாவ்(seeraga samba pulao recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பேர்
  1. 2 கப் சீரக சம்பா அரிசி
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 1 மீடியம் சைஸ் தக்காளி
  4. 1கை அளவு கொத்தமல்லி
  5. 1 கை அளவு புதினா
  6. 4 பச்சை மிளகாய்
  7. 100 மில்லி தேங்காய் எண்ணெய்
  8. தேவையான அளவுஉப்பு
  9. 1 சின்ன பீஸ் கல்பாசி
  10. 2 துண்டு பட்டை
  11. 3 லவங்கம்
  12. 4 ஏலக்காய்
  13. 11/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  14. 4 கப் தண்ணீர்
  15. 3 டேபிள் ஸ்பூன் தயிர்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் கல்பாசி இவை அனைத்தையும் சேர்த்து தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்

  2. 2

    சீரக சம்பா அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்

  3. 3

    வெங்காயம் கண்ணாடி போல் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்

  4. 4

    இஞ்சி பூண்டு பேஸ்ட் நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்

  5. 5

    இவை அனைத்தும் வதங்கியதும் தண்ணீர் தயிர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி வரும் வரை கொதிக்க விடவும்

  6. 6

    தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்துள்ள அரிசியை வடிகட்டி கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும்

  7. 7

    ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அரை தீயில் வைத்து அரிசியை வேகவிடவும்

  8. 8

    அரிசி வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும் இப்போது சீரக சம்பா புலாவ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
KARTHI KA
KARTHI KA @KARTHIKAAA
அன்று

Similar Recipes