கொத்தமல்லி அரைத்து சேர்த்த சிக்கன் கிரேவி(chicken gravy recipe in tamil)

LIYA LA
LIYA LA @LIYALA

கொத்தமல்லி அரைத்து சேர்த்த சிக்கன் கிரேவி(chicken gravy recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பேர்
  1. 1/2 கிலோ சிக்கன்
  2. 6 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  3. 2 துண்டு பட்டை
  4. 4 ஏலக்காய்
  5. 4 லவங்கம்
  6. 2 துண்டு கல்பாசி
  7. 2கை அளவு கொத்தமல்லி
  8. 2 மீடியம் சைஸ் தக்காளி
  9. 3 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  10. 3 கொத்து கருவேப்பிலை
  11. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 3 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  13. 1 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
  14. 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  15. 4 டீஸ்பூன் தயிர்
  16. தேவையான அளவுஉப்பு
  17. 4 பெரிய வெங்காயம்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    சிக்கனை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு பேஸ்ட் தக்காளி கருவேப்பிலை கொத்தமல்லி இவை அனைத்தையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு, ஏலக்காய் கல்பாசி அனைத்தையும் சேர்த்து கொள்ளவும்

  4. 4

    அதன் பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்

  5. 5

    வெங்காயம் பொன்னிறம் ஆனதும் வெங்காயத்தை பாத்திரத்தில் ஓரமாக தள்ளி வைத்து கொள்ளவும் பின் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

  6. 6

    மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு வதக்க வேண்டும்

  7. 7

    அதன் பின் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளற வேண்டும்

  8. 8

    சிக்கன் பாதி வெந்ததும் அதில் உப்பு மல்லித்தூள் கரம் மசாலா தயிர் சேர்த்து சிம்மில் வைத்து கிளறி வேக விடவும்

  9. 9

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்

  10. 10

    சிக்கன் நன்கு வெந்ததும் கடைசியாக கொத்தமல்லி இலையை தூவி பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
LIYA LA
LIYA LA @LIYALA
அன்று

Similar Recipes