ஸ்பிரிங் ரோல் பிரெட் (Spring roll bread recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#Kk
குழைந்தைகளுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள். எனவே புதிய வடிவத்தில் ஒரு பிரெட் முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது.

ஸ்பிரிங் ரோல் பிரெட் (Spring roll bread recipe in tamil)

#Kk
குழைந்தைகளுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள். எனவே புதிய வடிவத்தில் ஒரு பிரெட் முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி 30 நிமிடங்கள்
  1. 3 கப் மைதா மாவு
  2. 2 டீஸ்பூன் ஈஸ்ட்
  3. 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  4. 1 கப் பால்
  5. 1/2 டீஸ்பூன் உப்பு
  6. 3 டேபிள் ஸ்பூன் உருகிய வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி 30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பௌலில் ஈஸ்ட்,சர்க்கரை அத்துடன் ஒரு கப் மிதமான சூடுள்ள பாலை சேர்த்து நன்கு கலந்து பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.

  2. 2

    ஈஸ்ட் பால் கலவை நன்கு பொங்கி வந்தவுடன் மைதா மாவு,உப்பு, உருகிய வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  3. 3

    பின்னர் பால் கலவையை சேர்த்து நன்கு பிசையவும். அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

  4. 4

    பின்னர் எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து, ரோல் செய்யவும்.

  5. 5

    சப்பத்தியில் கடைசி கால் பாகத்தில்,கத்தியால் ரிப்பன் வடிவத்தில் நறுக்கி விட்டு ரோல் செய்யவும்.

  6. 6

    ரோல் செய்த்த பிரெட்ஐ கிளின் பிலிம் சுற்றி மூடி முப்பது நிமிடங்கள் வைக்கவும்.

  7. 7

    குறிப்பிட்ட நேரம் கழித்து எடுத்தால் நன்கு உப்பு வந்திருக்கும். அதன் மேல் பால் வைத்து பிரஷ் செய்து விட்டால் பேக் செய்ய பிரெட் ரோல் தயார்.

  8. 8

    பின்னர் எடுத்து 180 டிகிரி பிரீ ஹீட் செய்த அவனில் 30 நிமிடங்கள் பேக் செய்து எடுத்து, அதன் மேல் கொஞ்சம் பட்டர் தடவி,பதினைந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.

  9. 9

    இப்போது மிகவும் சுவையான,மிருதுவான ஸ்பிரிங் ரோல் பிரெட் தயார்.

  10. 10

    இது ஒரு வித்தியாசமான வடிவத்தில் உள்ளதால் குழைந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.

  11. 11

    அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் 💐

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes