பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#CH - Indo China
நிறைய விதமான ஸ்டாப்பிங் வைத்து மோமோஸ் செய்வார்கள்.. இங்கே நான் பச்சை பட்டாணி வைத்து மோமோஸ் செய்திருக்கிறேன்... வித்தியாசமான சுவையுடன் மிகவும் அருமையாக இருந்துது....

பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil)

#CH - Indo China
நிறைய விதமான ஸ்டாப்பிங் வைத்து மோமோஸ் செய்வார்கள்.. இங்கே நான் பச்சை பட்டாணி வைத்து மோமோஸ் செய்திருக்கிறேன்... வித்தியாசமான சுவையுடன் மிகவும் அருமையாக இருந்துது....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25-30 நிமிடங்கள
12 பரிமாறுவது
  1. 1 கப் மைதா மாவு
  2. 1/2 கப் பொடியா நறுக்கின வெங்காயம்
  3. 1/2 கப் பச்சை பட்டாணி
  4. 1/4 கப் நறுக்கின குட மிளகாய்
  5. தலா 1 டேபிள் ஸ்பூன் பொடியா நறுக்கின பூண்டு, இஞ்சி
  6. 1/2டீஸ்பூன் மிளகு
  7. 1/2 - 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  8. தேவைக்குஉப்பு, எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25-30 நிமிடங்கள
  1. 1

    முதலில் மைதா மாவை சப்பாத்தி மாவு பதத்துக்கு சாபட்டான மாவாக பிசைந்து வைத்துக்கவும். தேவையான வற்றை எடுத்து வைத்துக்கவும்.

  2. 2

    ஸ்டவ்வில் வாணலி வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கின பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  3. 3

    வெங்காயம் லேசா வதங்கியதும் அத்துடன் பச்சை பட்டாணி, உப்பு, மஞ்சள்தூள் கொஞ்சம் தண்ணி விட்டு மூடி வைத்து வேக விடவும்

  4. 4

    அதன்பிறகு குடமிளகாய் சேர்த்து வதக்கி, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட்டு ஸ்டவ்வில் இருந்து எடுத்து ஆற விடவும்

  5. 5

    மைதா மாவை கனம் குறைத்து சின்ன சின்ன பூரிகளாக் செய்துக்கவும். ஒரு பூரியின் நடுவில் பட்டாணி பூரணம் வைத்து அதை சிறு ப்ளீட்ஸ் போல் வைத்து மடித்து தொப்பி ஷேப்பில் செய்து இரண்டு பக்கத்தையும் சேர்த்து ஒட்டி விடவும்

  6. 6

    எல்லா வற்றையும் இதே போல் செய்யவும். அவரவர் விருப்பத்துக்கேத்தவாறு ஷேப் செய்துக்கவும்.

  7. 7

    ஸ்டவ்வில் இட்லி பாத்திரம் வைத்து செய்து வைத்திருக்கும் மோமோசை ஆவியில் 10 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்

  8. 8

    சுவையுடன் கூடிய பச்சை பட்டாணி மோமோஸ் தயார்...மிக மிக சுவையான மோமோசை, மோமோஸ் சட்னி அல்லது டொமட்டோ சாஸுடன் சேர்த்து சுவைக்கவும்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes