வாழைக்காய் கறி அமுது (சுக்கா)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#SU
உயிர் காக்கும் நலம் தரும் உணவு ஒரு அமுது. Fancy பெயர் கிடையாது சுக்கா என்னும் பெயரை போன வாரம் தான்
கேள்விபட்டேன். , அம்மா செய்வது போல செய்தேன் எளிய முறையில் சுவையான சத்தான வாழைக்காய் கறி அமுது செய்தேன். அம்மா 3 வித பொடிகள் செய்வார்கள்: சாம்பார் பொடி, கறி பொடி, ரச பொடி எல்லா பொடிகளிலும் உளுந்து கடலை பருப்பு, துவரம் பருப்பு உண்டு, மிளகு, கார மிளகாய், கொத்தமல்லி விதை proportion வேறுபடும். வெய்யலில் பொடி பொருட்களை உலர்த்துவார்கள். இங்கே 3 மாதமாக வெய்யல் இல்லை. வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை. அம்மா நல்லெண்ணை தான் சமைக்க பயன்படுத்துவார்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 4 மேஜைகரண்டி நல்லெண்ணை
  2. 1 தேக்கரண்டி கடுகு
  3. 1தேக்கரண்டி சீரகம்
  4. ¼ தேக்கரண்டி வெந்தயம்
  5. ½ தேக்கரண்டி பெருங்காயப்பொடி
  6. ½ கப் கறிவேப்பிலை
  7. 3பெரிய வாழைக்காய் (6 கப் மெல்லிய ஸ்லைஸ்கள்)
  8. 1எலுமிச்சம்பழம்
  9. 1 மேஜை கரண்டி இஞ்சி பொடியாக நறுக்கியது
  10. ¼ தேக்கரண்டி மஞ்சள் பொடி
  11. 1 மேஜை கரண்டி மசாலா பொடி
  12. 1 தேக்கரண்டி மிளகு பொடி
  13. ¼ கப் கறிவேப்பிலை
  14. தேவையானஉப்பு
  15. மசாலா பொடி ஸ்டாக் செய்ய:
  16. 4 மேஜைகரண்டி கடலை பருப்பு
  17. 2 மேஜைகரண்டி உளுத்தம் பருப்பு
  18. 2 மேஜைகரண்டி தனியா
  19. 1 மேஜைகரண்டி மிளகு
  20. ½ தேக்கரண்டி வெந்தயம்
  21. 1 மேஜைகரண்டி சோம்பு
  22. 10 கார வர மிளகாய்
  23. வாழைக்காய் கறி அமுது (சுக்கா)

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க

  2. 2

    மசாலா பொடி ஸ்டாக் செய்ய;
    எல்லா பொருட்களும் டிரை ரோஸ்ட் செய்ய வேண்டும்.. மிதமான தீயின் மேல் ஒரு கனமான பாத்திரத்தில் பொருட்களை ஒன்றாக சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க. மிளகாயை காந்த அடிக்காதீர்கள்; வறுத்த பொருட்களை மிக்ஸியில் பொடிசெய்க. மசாலா பொடியை காற்று புகாத ஜாரில் 1 மாதம் வரை சேமித்து வைக்கலாம்

  3. 3

    வாழைப்பழத் தோலில் வைட்டமின் B6, A, D, நார் சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. நீங்கள் ஊட்டச்சத்துக்களை பாதுகாக்க வேண்டும் நீங்கள் வாழையை இரண்டாக வெட்டும்போது, வெளிப்புறத்தை கீழே இழுத்து பச்சை நிற தோலை உரிக்கவும். தோலின் உட்புற வெண்மையான பகுதியை வைத்துக்கொள்ளுங்கள். பின் மெல்லிய ஸ்லைஸ்கள் செய்க. பாத்திரத்தில் தண்ணீர் எடுக்கவும். எலுமிச்சை சாறு சேர்க்கவும். வாழைத் துண்டுகளை பாத்திரத்தில் 10-15 நிமிடங்கள் ஊற வைக்க அப்போது பழுப்பு நிறமாக மாறாது. பிறகு வடித்து, மஞ்சள் தூள் சேர்த்து குலுக்க

  4. 4

    வாழைஸ்லைஸ்கள் கிண்ணத்தில் தண்ணீர் சேர்க்க வேண்டாம். பிரஷர் குக்கரில் ஆவியில் வேகவைக்கவும்.

  5. 5

    மிதமான தீயின் மேல் ஒரு அடி கனமான வாணலியில் 2 மேஜை கரண்டி எண்ணை சூடு செய்க, 2 நிமிடம். கடுகு சேர்க்க, பொறிந்த பின் வெந்தயம், சோம்பு, பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்க, 2 நிமிடம். மஞ்சள் பொடி சேர்க்க. வேகவைத்த வாழைக்காய் கிளற. நெருப்பை குறை..கி ற மசாலா பொடி உப்பு சேர்த்து கிளற
    கருப்பு மிளகு பொடி போட்டு வறுக்கவும். சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (5)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
இது போல புரியர பேர்ல ரெசிபி போடுங்க... நிறைய recipie English எழுத்து கூட்டி padikkiraen 😔😊😃

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes