கம்பு சோய் தோசை

Visu Iyer
Visu Iyer @Iyer
India

சத்தான சுவைமிக்க கம்பு சோய் தோசை.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

8 மணி நேரம்
  1. கம்பு -250 கிராம்
  2. முழு உளுந்து -150
  3. வெந்தயம் 4 ஸ்பூன்
  4. ஜவ்வரிசி 2 🥄 ஸ்பூன்
  5. சோயா 50கிராம்
  6. உப்பு - ஒரு சிட்டிகை

சமையல் குறிப்புகள்

8 மணி நேரம்
  1. 1

    சுத்தமான கம்பை 8 மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    கறுப்பு உளுந்து அல்லது முழு உளுந்தை 4 மணி நேரம் ஊற வைக்கவும்

  3. 3

    வெந்தயத்தை தனியாக4 மணி நேரம் ஊற வைக்கவும்

  4. 4

    ஜவ்வரிசியை 2 மணி நேரம் தனியாக ஊற வைக்கவும்

  5. 5

    சோயாவை தனியாக 4 மணி நேரம் ஊற வைக்கவும்

  6. 6

    8 மணி நேரத்திற்கு பிறகு ஊற வைத்த கம்பு,
    ஊற வைத்த முழு உளுந்து,
    ஊற வைத்த சோயா,
    ஊற வைத்த வெந்தயம்
    ஊற வைத்த ஜவ்வரிசி
    இவைகளை தனித்தனியாக கழுவி சுத்தம் செய்து

    ஒவ்வொன்றாக கிரைண்டரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

  7. 7

    அரைத்த மாவை
    ஒரு பாத்திரத்தில் வழித்து ஒரு சிட்டிகை உப்பு போட்டு கலந்து வைக்கவும்.

  8. 8

    ஒரு மணி நேரத்திற்கு பிறகு தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் அல்லது நெய் விட்டு தோசை வார்த்து பரிமாறவும்

  9. 9

    திண்ண, திண்ண திகட்டாத
    சத்தான சுவைமிக்க கம்பு சோய் தோசை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Visu Iyer
அன்று
India
love to cook - cooking tips and bachelor's recipie, fireless cooking, healthy 🙂 and easy cookies
மேலும் படிக்க

Similar Recipes