குடமிளகாய் சட்னி

Kiruthika Vijai
Kiruthika Vijai @cook_16934291
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4நபருக்கு
  1. குடைமிளகாய்- 2
  2. வெங்காயம் - 2 பெரியது
  3. தக்காளி - 2
  4. பூண்டு - 5
  5. வரமிளகாய் - 4
  6. தேங்காய் - 4 சில்லு
  7. பொட்டு கடலை - 1 மேஜைக்கரண்டி
  8. சீரகம் - 1 டீஸ்பூன்
  9. உப்பு - தேவையான அளவு
  10. நல்லெண்ணை - 1 மேஜைக்கரண்டி

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் இவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், வரமிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து வதக்கவும்

  3. 3

    குடைமிளகாய் நன்றாக வேகும் வரை வதக்கவும்.உப்பு சேர்த்து வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

  4. 4

    வதக்கிய கலவையை ஆறவைத்து தேங்காய், பொட்டு கடலை மற்றும் புளி சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

  5. 5

    சுவையான குடைமிளகாய் சட்னி தயார்.

  6. 6

    தேவை என்றால் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து எடுக்கலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kiruthika Vijai
Kiruthika Vijai @cook_16934291
அன்று

Similar Recipes