வாழைக்காய் பொடிமாஸ்

#மதிய உணவுகள்
மதியம் சாம்பார் அல்லது ரசத்துடன் சாப்பிட ஏற்ற காய் இது. எப்போதும் வாழைக்காய் ப்ரை செய்வதற்கு பதிலாக ஒரு மாற்று.
வாழைக்காய் பொடிமாஸ்
#மதிய உணவுகள்
மதியம் சாம்பார் அல்லது ரசத்துடன் சாப்பிட ஏற்ற காய் இது. எப்போதும் வாழைக்காய் ப்ரை செய்வதற்கு பதிலாக ஒரு மாற்று.
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் வாழைக்காயை இரண்டாக நறுக்கி போட்டு ஐந்து நிமிடங்கள் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
- 2
சிறிது ஆறிய பிறகு தோல் நீக்கி துருவி கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய்,இஞ்சி சேர்த்து வதக்கவும்.
- 4
மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயம் சேர்த்து கொள்ளவும்
- 5
சிறிது வதங்கியதும் துருவிய வாழைக்காய், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி எலுமிச்சை சாறு கலந்து இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முப்பருப்பு சேவை
#அரிசி வகை உணவுகள் எப்போதும் தேங்காய் சேவை,எலுமிச்சை சேவை செய்வதற்கு பதிலாக பருப்பு உசிலி செய்து சேவையில் கலந்து செய்யும் சுவையான முழுமையான காலை நேர உணவு.பருப்பு வகைகள் சேர்த்து இருப்பதால் புரோட்டீன் நிறைந்த உணவு. Sowmya Sundar -
-
-
-
வாழைக்காய் வறுவல்(vazhakkai fry)👌👌👌
#pms family அருமையான ருசியான எல்லோரும் விரும்பும் வாழைக்காய் வறுவல் செய்ய முதலில் கொத்துமல்லி,சீரகம்,வரமிளகாய்,கறிவேப்பிலை,துருவிய தேங்காய் அனைத்தையும் எண்ணெயில் நன்றாக வதக்கி கொர கொராப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு போட்டு தாளித்து விட்டு பின் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய்,மஞ்சள் தூள் போட்டு நன்கு எண்ணெயில் வதக்கி விட்டு பின் சிறிது தண்ணீரை தெளித்து விட்டு 5 நிமிடம் வேக விடவும்.வாழைக்காய் வெந்த பிறகு உப்பு தேவையான அளவு தூவி அதனுடன் அரைத்து வைத்துள்ள கொத்துமல்லி,சீரகம், தேங்காய் கலவைகளை போட்டு நன்கு கிளறி விட்டு மல்லி இலைகள் தூவி இறக்க வேண்டும்...ருசியான வாழைக்காய் வறுவல்(vazhakkai fry) தயார்👍👍 Bhanu Vasu -
வாழைக்காய் மீன் வறுவல் #நாட்டு காய்றி உணவுகள்
1.நன்கு முற்றிய வாழைக்காயை தோல் சீவவும்.2.நைசாக அதாவது சிறிது தடிமனாக வட்ட வடிவில் துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போடவும். தண்ணீரில் போடவில்லை என்றால் காய் கருத்துவிடும்.3.இஞ்சியை தோல் சீவி விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன், சோம்பு, பூண்டுப்பல் சேர்த்து விழுதாக அரைக்கவும்.4.ஒரு அகன்ற பாத்திரத்தில் இஞ்சி விழுது, தேங்காய் அரைத்தது, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஒன்றாக கலக்கவும்.5.வாழைக்காயை தண்ணீர் வடியவிடவும். பிறகு மசாலா இருக்கும் பாத்திரத்தில் போட்டு நன்கு கிளறவும். உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கிளறி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.6.ஒரு மணிநேரம் கழித்து ஒரு தவா அல்லது வாணலியை அடுப்பில் வைத்து சூடு ஏற்றவும். தவா நன்கு காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் வாழைக்காய் களை ஒன்று ஒன்றாக போடவும்.7.பிறகு அதற்கு மேல் கறிவேப்பிலையை சேர்க்கவும். பிறகு அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும். மூடி போட வேண்டாம். ஏனெனில் அடிபிடிக்கும்.8.சிம்மில் வைத்து 5 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி கிளறி விடவும். நன்கு, சிவந்து, வெந்ததும் அடுப்பை அணைக்கவும். சூப்பரான வாழைக்காய் மீன் வறுவல். சாம்பார், ரசம், சூப் இவைகளுக்கு ஏற்ற சைட் டிஷ். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. Laxmi Kailash -
வாழைக்காய் பொடிமாஸ், சாதம்
உருளை பொடிமாஸ் செய்வது போல வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன்.வாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசி. #everyday2 Lakshmi Sridharan Ph D -
முளைகட்டிய கொண்டைகடலை சாதம்
#அரிசி வகை உணவுகள்முளைகட்டிய கருப்பு கொண்டைகடலை உபயோகப்படுத்தி செய்த சத்தான சாதம். Sowmya Sundar -
வாழைக்காய் உப்பு பொரியல் (Vaazhzikaai poriyal recipe in tamil)
#ilovecooking வாழைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். Aishwarya MuthuKumar -
கல்யாண சாம்பார்
#sambarrasamகல்யாணத்தின் போது பரிமாறப்படும் காய்கறிகள் சேர்த்த அரைத்து விட்ட சாம்பார் இது . Sowmya sundar -
பாலக்கீரை மசியல் வித் சேனைக்கிழங்கு பொரியல்/ வறுவல்
#மதிய உணவுகள்எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் நல்ல ஆரோக்கியமான மதிய உணவு Pavithra Prasadkumar -
வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil)
#GA4#week2எதிர் பாராமல் விருந்தினர் வரும் போது அல்லது மாலை நேரத்தில் டீயோடு சுவைக்க ஏற்றது வாழைக்காய் வடை. சூடாக சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Natchiyar Sivasailam -
பாலாகாய் ரோஸ்ட்.. (வாழைக்காய் மிளகு ரோஸ்ட்) (Balakai roast recipe in tamil)
#karnataka... இது ஒரு கன்னட நாட்டு வாழைக்காய் வறுவல்... Nalini Shankar -
மாலைநேர ஸ்நாக்ஸ் வாழைக்காய் பஜ்ஜி #the.Chennai.foodie
நாளை சன்டே விடுமுறை என்பதால் அனைவரும் வீட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு மாலையில் வாழைக்காய் பஜ்ஜி செய்து கொடுத்து அசத்துங்கள். #the.Chennai.foodie Kalai Arasi -
-
அரைத்துவிட்ட வெண் பூசணி சாம்பார்
#bookமதிய உணவிற்கு ஏற்ற சாம்பார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். என் மாமியாரின் ஸ்பெஷல் ரெசிபி.. என் மகனுக்கு மிகவும் பிடித்த சாம்பார். தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காயை அரைத்து விடுவதால் துவரம் பருப்பு குறைவாகத்தான் தேவைப்படும். Meena Ramesh -
-
-
-
-
-
உடுப்பி ஸ்டைல் டம்ளர் இட்லி
#அரிசிவகை உணவுகள்அரிசி ரவையை பயன்படுத்தி செய்த கிளாஸ் இட்லி இது. கர்நாடகாவில் அரிசியை அரைப்பதற்கு பதில் அரிசியை ரவையாக உடைத்து உளுந்துடன் கலந்து இட்லி செய்வார்கள். Sowmya Sundar -
வாழைக்காய் பொரியல்
#bookவிரத சமையலுக்கு ஏற்ற பொரியல். சாதரணமாக வாழைக்காய் பொரியல் செய்வதை காட்டிலும், இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
வாழைக்காய் தவா ஃப்ரை
சமையல் சமையல் நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் அவர்கள் செய்த வாழைக்காய் சேனைக்கிழங்கு தவா ஃப்ரை, நான் வாழைக்காய் மட்டும் வைத்து செய்துள்ளேன்#TV Gowri's kitchen -
* வாழைக்காய் வறுவல்*(ஸ்பைஸி)(raw banana fry recipe in tamil)
வாழைக்காய் வறுவல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.மேலும் இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும்.தே.எண்ணெயில் செய்வதால், கூடுதல் சுவை. Jegadhambal N -
வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikkaai podimass recipe in tamil)
மிகவும் சுவையான பொடிமாஸ் காரக்குழம்பு உடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.. Raji Alan -
-
உருளைக்கிழங்கு பொடிமாஸ்
குமரி மாவட்ட ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் இது. எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் விருப்பமான சைட் டஷ் Swarna Latha
More Recipes
கமெண்ட்