சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
- 2
நல்ல வர தேங்காயை எடுத்து துருவி சிறிது ஐஸ்கட்டியை சேர்த்து நன்கு அரைத்து பின் பிழிந்து கெட்டியான தேங்காய் பால் எடுக்கவும்
- 3
பின் மீண்டும் சிறிது (1/4 கப் தண்ணீரை இரண்டாக பிரித்து வைக்கவும்) தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைத்து இரண்டாம் பால் எடுக்கவும்
- 4
பின் மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து பிழிந்து மூன்றாவது பால் எடுத்து வைக்கவும்
- 5
இப்போது மூன்றாவது தேங்காய் பாலுடன் பிசைந்து வைத்த கோதுமை மாவை சுமார் அரை மணி நேரம் வரை ஊறவிடவும்
- 6
பின் அதை நன்கு பிசைந்து மஸ்லின் துணியில் நன்கு பிழிந்து வடிகட்டி பால் எடுத்து வைக்கவும்
- 7
பின் இரண்டாம் தேங்காய் பாலை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கலந்து வைக்கவும்
- 8
பின் அடிகனமான பாத்திரத்தில் கேரமல் செய்ய கொடுத்துள்ள சர்க்கரை சேர்த்து மெல்லிய தீயில் உருக்கவும்
- 9
சர்க்கரை சூட்டில் இளகி பின் உருக ஆரம்பிக்கும்
- 10
பின் (தொடர்ந்து மெல்லிய தீயில் வைத்து நிதானமாக கிளறவும் இல்லை என்றால் கருகி விடும்)
- 11
பின் சிறிது நேரத்தில் சர்க்கரை முழுவதும் கரைந்து தேன் கலரில் வரும் போது சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கிளறவும்
- 12
சர்க்கரை கரைந்து இப்போது கேரமல் சாஸ் கிடைக்கும் அதை தனியாக எடுத்து வைக்கவும்
- 13
இப்போது அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் முதல் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 14
பின் கட்டியில்லாமல் கலந்து வைத்துள்ள கோதுமை மாவு கரைசலை ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்
- 15
பின் அடுப்பை பற்ற வைத்து மெல்லிய தீயில் வைத்து நிதானமாக கிளறவும்
- 16
தீயை வேகமாக வைத்தால் சீக்கிரம் பதம் வந்து விடும் அல்வா நன்றாக இருக்காது கண்டிப்பாக மெல்லிய தீயில் வைத்து கிளறவும்
- 17
பதினைந்து நிமிடத்தில் சற்று கெட்டியாக ஆரம்பிக்கும்
- 18
தொடர்ந்து கிளறவும் தேங்காய் பால் கொதிக்க கொதிக்க எண்ணெய் பிரிந்து வரும் இந்த அல்வா பொறுத்தவரை நெய் தேவையில்லை தட்டில் தடவ மட்டுமே தேவை
- 19
நன்கு திக்காக பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது கேரமல் சாஸ் கலந்து கிளறவும்
- 20
நன்கு திரண்டு உருண்டு வரும் (கையை ஈரப்படுத்தி கொண்டு கையில் தொட்டு உருட்டினால் நன்கு உருண்டு வருவது பதம்)
- 21
பின் நறுக்கிய தேங்காய் துண்டுகள் மற்றும் நட்ஸ் கலந்து கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறியதும் துண்டுகள் போடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
#littlechefஇந்த ரெசிபி எங்க வீட்டுல எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஒன்று தலைமுறை தலைமுறையாக கை பக்குவம் மாறாம வருவது எங்க பாட்டி எங்க அப்பாவுக்கு சொல்லி கொடுத்தது பதம் பக்குவம் மாறாம செய்ய சொல்லி கொடுத்தாங்க எங்க அப்பா நேரம் கிடைக்கும் போது எல்லாம் செய்து தருவார்கள் இப்போ அத அப்படியே கொஞ்சமும் மாறாம செய்து கொடுத்து எங்க அப்பாகிட்ட பாராட்ட வாங்கி தந்த ரெசிபி எங்க அம்மா செஞ்சு கொடுத்து சாப்பிட்ட மாதிரியே இருக்கு னு சொல்வார் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் சாக்லேட் லட்டு(coconut chocolate laddu recipe in tamil)
#DEதீபாவளிக்கு ரொம்ப நேரம் கை வலிக்க கிளற வேண்டாம் அதே போல பாகு பதம் எல்லாம் பார்க்க தேவையில்லை சட்டுனு பத்து நிமிடத்தில் கிளறி விடலாம் Sudharani // OS KITCHEN -
ஏத்தம்பழம்(Ethampazham)அல்வா (Ethampazham halwa recipe in tamil)
#keralaகேரளாவில் தனிநாடான் பகுதியில் பிரபலமான அல்வா இது எப்போ போனாலும் வாங்காம வந்ததில்லை திருநெல்வேலியில் எப்படி கோதுமை வைத்து செய்யற இருட்டு கடை அல்வா பேமசோ அதே போல கேரளாவில் நேந்திரம் பழம் மற்றும் தேங்காய் பால் பயன்படுத்தி செய்யற இந்த அல்வா பிரபலமானது Sudharani // OS KITCHEN -
தேங்காய் முந்திரி பாத் (Thenkaai munthiri bath recipe in tamil)
#coconut#GA4#Week5 Sudharani // OS KITCHEN -
-
வியட்நாம் பாயாசம்
#combo5பேர் புதியதாக இருக்கிறதே என்று யோசிக்காதீர்கள் பருப்பு மற்றும் ஜவ்வரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து செய்யும் கல்யாண வீட்டு ஸ்பெஷல் பாயாசம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
தக்காளி அல்வா
#golden apron3#நாட்டுக் காய்கறிகள் சமையல்நாட்டுக் காய்கறிகள் என்றாலே தக்காளிக்கு முதலிடம் கோல்டன் apron தக்காளி உள்ளதால் தக்காளியை வைத்து பாய் வீட்டில் பிரியாணியுடன் சேர்த்து நமக்கு தரக்கூடிய இந்த தக்காளி அல்வா ரெசிபி செய்வது எப்படி என்பதை பகிர்கின்றேன் Santhi Chowthri -
-
-
-
-
*தேங்காய் பால் சாதம்*
இந்த ரெசிபி, மிகவும் சுவையானது. செய்வதும் மிகச் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
-
-
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#flour1திருவையாறு ஸ்பெஷல் அசோக அல்வா மிகவும் பிரசித்தம்பெற்றது செய்வது மிகவும் சுலபம் Sudharani // OS KITCHEN -
விரத ப்ரட் மலாய் ரபடி(bread malai rabdi recipe in tamil)
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு விருந்துகளில் பரிமாற ஏற்ற உணவு Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட் (2)